விஜய்க்கே பிடி கிடைக்கல.. புஸ்ஸி தலைமறைவு.. ஜான், அருண் குழப்பம்.. கடுப்பின் உச்சத்திற்கே போன விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை பெஞ்சில் நடந்த விசாரணையில் விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த வழக்கு கடுமையான பின்னடைவை விஜய்க்கு ஏற்படுத்தி உள்ள நிலையில்.. விஜய் தரப்பு கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு வைக்கப்பட்ட குட்டு

கரூர் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களில் சென்னை உயர் நீதிமன்றம் பென்ச் கடுமையான விமர்சனங்களை வைத்தது. அதில், கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. விஜய் தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்.

TVK Vijay

அதேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீதி கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது சட்ட பூர்வமாக அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஏன் கருணை காட்டுகிறீர்கள். அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேவையான நேரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.

நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது. வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, hit and run வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. வழக்குப் பதிவு செய்ய என்ன தடை, புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை.. அதிர்ச்சியாக இருக்கிறது.. வீடியோக்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?

விஜய் மீது கடும் ஆக்சன் அவசியம்

தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவிற்காக காத்து இருக்காதீர்கள். நீங்களே நடவடிக்கை எடுங்கள். அவர் புரட்சி ஏற்படுத்தும் விதமாக போஸ்ட் செய்துள்ளார். எப்படி பார்த்துக்கொண்டு இருந்தீர்கள். பொறுப்பற்ற இது போன்ற பேச்சுக்களை உடனே களைய வேண்டும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் மீது அரசு கரிசனம் காட்டுகிறதா? இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

கடுப்பில் விஜய்

இந்த வழக்கு காரணமாக விஜய் கடுமையான சோகத்தில் இருக்கிறாராம். இதுவரை பெரிய தோல்வியை பார்க்காத விஜய்.. இந்த நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக.. அப்படியே உடைந்து போய் இருக்கிறாராம்.

இதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இன்னொரு பக்கம் ஜான் ஆரோக்கியசாமி, அருண், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடும் கோபத்தில், கலக்கத்தில் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இதில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் கொஞ்சம் அரசியல் தெரிந்த புஸ்ஸி ஆனந்தும் தலைமறைவாகிவிட்டார் என்பதால் விஜய் என்ன செய்வது என்றே தெரியாமல் முடங்கி உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+