யாரந்த லீடர்? மிக முக்கியமான தலைவரை.. ரகசியமாக சந்தித்த விஜய்? 2 மணி நேரம் பேச்சு.. அப்போ திமுக?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான ஒரு தகவல் கடந்த 24 மணி நேரமாக விவாதப் பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், நடிகருமான விஜய், ஆளும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் மூத்த தலைவரை ரகசியமாகச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்தித்த தலைவரின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் தேர்தலுக்கான அரசியல் வியூகங்கள் மற்றும் சாத்தியமான கூட்டணிகள் குறித்து இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மிக ரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

விஜய் ஆலோசனை
இந்த பேச்சுவார்த்தை முற்றிலும் அரசியல் சார்ந்ததாக இருந்ததாகவும், தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி நிலைப்பாடுகள் மற்றும் விஜய்யின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய், தூய்மையான அரசியல் மற்றும் இளைஞர் மேம்பாட்டை முன்னிறுத்தி மக்களின் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். கல்வி, ஊழல் மற்றும் நல்லாட்சி போன்ற பிரச்சனைகளை அவர் தனது பொதுக்கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறார். கரூர் விவகாரம் அவரின் அரசியல் திட்டங்களில் பெரிய ஸ்பீட் பிரேக் போட்டது.
இருப்பினும், இந்த ரகசிய சந்திப்பு, TVK ஏற்கனவே இருக்கும் சில பிரபல கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் உள்ளதா என்ற விவாதத்தைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் மாறிவரும் அரசியல் சூழலில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் என்பதால், இத்தகைய சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
விஜய் முதல்வர் வேட்பாளர்
ஏற்கனவே தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானத்தில், தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும். தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது., என்று கூறப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய், ஆளும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் மூத்த தலைவரை ரகசியமாகச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை, விஜய்யோ அல்லது அவரது கட்சி பிரதிநிதிகளோ இந்த வதந்திகள் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, அரசியல் மற்றும் ரசிகர் வட்டாரங்களில் இந்த ஊகங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications