ஸ்டாலினை வீழ்த்த முடியாது.. விஜய் போட்ட சூப்பர் கணக்கு.. டார்கெட் எடப்பாடிதான்.. அடித்து ஆடுகிறாரே!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில்லை என முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கட்சியைச் சேர்ந்த வட்டாரங்கள், 2026லேயே கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை பெறுவதை நோக்கமாகக் கொள்ளாமல், 2031ஐ டார்கெட் செய்ய விஜய் திட்டமிடுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக - விஜய்
சமீபத்தில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயின் அறிவிப்பால் அதிமுகவினர் கடுமையாக அப்செட் ஆனார்கள். முக்கியமாக கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவினர் ஊடகங்களில் பேசி வந்தனர். தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது அதிமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
விஜய் பிளான் - வலுவான அடித்தளம்
அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, 2026-ல் ஆளுங்கட்சியான தி.மு.க.வை வீழ்த்துவது எந்த ஒரு புதிய கட்சிக்கும் கடினமான காரியம்.. ஸ்டாலினை எளிதாக இந்த தேர்தலில் வீழ்த்த முடியாது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். இருப்பினும், தனித்துப் போட்டியிடுவதன் மூலம், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் இருப்பை விரிவுபடுத்தி, எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்-அ.தி.மு.க. கூட்டணி வெளிப்படையாக பார்த்தால் பலமாகத் தோன்றினாலும், அது அ.தி.மு.க.வுக்கு மட்டுமே ஆதாயம் தரும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க.வின் கீழ் ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாக இருக்கும். இது அதிமுகவை வலுப்படுத்தும். விஜய் இன்னொரு கூட்டணி கட்சியாக குறைந்துவிடுவார்.
இத்தகைய கூட்டணியில் சேராமல் இருப்பதன் மூலம், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பல பகுதிகளில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை விஜய் குறைப்பார். அதிமுக வாக்குகள் பல விஜய்க்கு வரும்.
இது காலப்போக்கில் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய மாற்று சக்தியாக உருவெடுக்க உதவும். விஜய்யின் அரசியல் உத்தி பொறுமையையும், திட்டமிடலையும் அடிப்படையாகக் கொண்டது.
உடனடி ஆதாயம் வேண்டாம் - விஜய் முடிவு
2026-ல் உடனடி ஆதாயங்களைத் தேடுவதை விட, அமைப்பு ரீதியான பலத்தையும், மாவட்ட அளவிலான கட்டமைப்புகளையும், விசுவாசமான வாக்காளர் தளத்தையும் உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்துகிறார். இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே அவரது செல்வாக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் நீண்டகால வாய்ப்புகளை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், விஜய் தனித்துப் போட்டியிடும் முடிவானது தமிழக அரசியல் களத்தில் ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்பியுள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழகம் நீண்டகாலப் பயணத்திற்குத் தயாராகிவிட்டது; 2031-ஐயே உண்மையான டார்கெட்டாக கட்சி கொண்டுள்ளது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications