இப்படி பண்றீங்களேம்மா.. விஜயின் கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து.. தொண்டர்கள் ஏமாற்றம்
சென்னை: கடலூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்யவிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் என இரண்டு இடங்களில் நடிகர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி தொகுதியை தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக விஜய் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரசாரத்திற்கு காவல் துறையினர் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கினர். இதனால், அந்தப் பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி உட்பட 3 தொகுதிகளில் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு விஜய் வருவதற்கே மிகவும் தாமதம் ஏற்பட்டது. விஜய் வரும் வழியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு விஜய் வந்து சேர காலதாமதம் ஏற்பட்டது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியதால் அங்கு பேசாமலேயே ரோடு ஷோ மட்டும் விஜய் புறப்பட்டுச் சென்றார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடலூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்யவிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் 19 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் விஜய் பரப்புரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் நாளை பரப்புரைக்கு பதில் விஜய் ரோடு ஷோ செல்லவுள்ளார்.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications