களத்தை தீர்மானிக்கும் பலம்.. அதிமுகவுக்கு விஜய் கொடுத்த ரெட் சிக்னல்.. தவெகவின் அடுத்த திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 38 நாட்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து தெரிய வந்துள்ளது. தவெகவின் சிறப்பு பொதுக்குழுவில் விஜய் திமுக vs தவெக இடையிலான போட்டி என்று சொல்லி இருப்பதன் மூலமாக, அதிமுக அரசியல் சீனில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற மறைமுக திட்டத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கரூர் துயரச் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் பொதுவெளிக்கு வந்துள்ளார். தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை முன் வைத்து திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடி இருக்கிறார். அதேபோல் தேர்தல் களத்தை திமுக மற்றும் தவெக இடையில் கூர்மைப்படுத்தி உள்ளார்.

TVK vs DMK

இன்னொரு முக்கியமான சம்பவம் என்றால், தவெக சிறப்பு பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் தான். முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்கக் கூடிய முழு அதிகாரமும் விஜய்க்கே என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதன் மூலமாக, அதிமுகவின் கூட்டணி அழைப்பை விஜய் நிராகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

கரூர் சம்பவத்திற்கு பின் சுமார் ஒரு மாத காலமாக தவெகவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பேசி வந்தனர். ஆனால் விஜய் அதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. கரூர் சம்பவத்தில் தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கு ஒரு நன்றியை கூட விஜய் கூறவில்லை. அவர் முழுக்க முழுக்க திமுகவை அட்டாக் செய்ததோடு, தேர்தலுக்கான களத்தையும் தயார் செய்ய தொடங்கி இருக்கிறார்.

இதன் மூலமாக களத்தை தீர்மானிக்க கூடிய பலத்துடன் தான் தவெக இருக்கிறது என்பதை விஜய் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். சுமார் 26 சதவிகித ஆதரவு தவெகவுக்கு இருக்கிறது என்றும், மாற்றத்தை கொடுப்போம் என்றும் தவெக மேடையில் பேசி இருக்கின்றனர். இதனால் அதிமுக அரசியல் சீனிலேயே இல்லை என்றும் தவெக கருதுவதாக தெரிகிறது.

அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளதோடு, அதிமுகவின் இடத்தையும் விஜய் நிரப்பிவிட்டதாக பேசி இருக்கிறார். இதன் காரணமாகவே களம் திமுக vs தவெக என்று மாறிவிட்டதாக விஜய் பேசுவதாக தெரிகிறது. இதனால் அதிமுகவுக்கு ரெட் சிக்னல் கொடுத்ததோடு, அடுத்தக்கட்ட அரசியல் திட்டத்தையும் விஜய் மறைமுகமாக கூறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+