அதிமுகவை 3ம் இடத்திற்கு தள்ளும் விஜய்! சென்னையில் மேலே வரும் தவெக! எடப்பாடிக்கு சிம்ம சொப்பனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையின் அரசியல் வானிலை வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறது. திராவிடப் பேரியக்கங்களின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையில், இந்த முறை தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வரவு ஒரு பெரும் 'எலெக்ட்ரிக்' அலை போலப் பாய்ந்திருக்கிறது.

குறிப்பாக, விஜய் போட்டியிடாத தொகுதிகளிலும் தவெகே வேட்பாளர்கள் காட்டும் வேகம், எடப்பாடியாரை ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறது.

tamil nadu assembly elections 2026 tvk

சென்னை பெல்ட்டில் தவெக-வின் 'டாப் கியர்'!

விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால், ஒட்டுமொத்த கவனமும் அங்கு குவிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரம் வேறு ஒரு ரகசியத்தைச் சொல்கிறது. மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி போன்ற தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் கொடுக்கும் குடைச்சல் தற்போதைய எம்.எல்.ஏ-க்களுக்கே 'கிலி'யை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர்: இதுதான் இப்போதைய ஹாட் டாபிக். இங்கே தவெக பொருளாளர் பி. வெங்கடரமணன் களமிறங்கியுள்ளார். "மயிலாப்பூரில் தவெக வெல்லவும் வாய்ப்பிருக்கிறது" என ஒரு தனியார் சர்வே முடிவுகள் கசிகின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பாஜவின் தமிழிசை சௌந்தரராஜன் இங்கே டெபாசிட் இழந்தால், அந்த வாக்குகள் அப்படியே தவெக-க்குத் திரும்புமாம். அப்படி நடந்தால், மயிலாப்பூர் மாங்கனி தவெகவின் கைக்குச் செல்வது உறுதி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சைதாப்பேட்டை & பெரம்பூர்: சைதாப்பேட்டையில் எம். அருள் பிரகாசம், ஆவடியில் ஆர். ரமேஷ்குமார் என தவெக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திராவிட கட்சிகளின் 'டிரெடிஷனல்' வாக்கு வங்கியில் ஓட்டை விழுவதை யாராலும் மறுக்க முடியவில்லை.

ஸ்டாலின் - ஈபிஎஸ் செய்த 'நல்ல காரியம்'

இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தன. அது - கூட்டணி கட்சிகளுக்குச் சென்னையில் சொற்ப இடங்களை ஒதுக்கியது.

கடந்த முறை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தாராளம் காட்டிய ஸ்டாலின், இந்த முறை சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் உதயசூரியனை நிறுத்தியுள்ளார். அதேபோல் எடப்பாடியாரும் கூட்டணிக் கட்சிகளை விடத் தன் கட்சியின் 'ரத்தத்தின் ரத்தங்களுக்கே' முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது ஒரு வகையில் புத்திசாலித்தனமான நகர்வுதான். கூட்டணி வேட்பாளர்கள் நின்றால் சிதறக்கூடிய வாக்குகளைத் தக்கவைக்க இது உதவும். ஆனால், இதையும் தாண்டி விஜய்யின் 'யங் ஆர்மி' எல்லா ஏரியாக்களிலும் ஓட்டு வேட்டையாடுவதுதான் ஆச்சரியம்.

விஜய்யின் பலம் எது?

பெரம்பூரில் விஜய் நிற்பது சென்னை முழுவதுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"தலைவர் இங்கேயே நிற்கிறார்" என்ற உணர்வு வட சென்னை முதல் தென் சென்னை வரை உள்ள இளைஞர்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், சென்னையின் அரசியல் வரைபடத்தில் தவெக ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை மட்டும் மறுக்க முடியாது. மொத்தத்தில் தவெக விஜய் திமுகவை விட.. அதிமுகவைத்தான் அதிகம் பாதிக்கிறார். அதேபோல் அதிமுகவின் இரண்டாம் இடத்தை கூட பல இடங்களில் அவர் தட்டிப்பறிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதை எல்லாம் எடப்பாடி எப்படி சமாளிக்க போகிறார்.. சென்னையில் 3ம் இடத்திற்கு தள்ளப்படுவதை அவர் எப்படி தடுக்க போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+