சோப்ளாங்கி அரசு.. வாய் திறக்காமல் இருப்பது ஏன்? பயிர்க் கடன் தள்ளுபடி எப்போ? இறங்கி அடித்த உதயநிதி!
சென்னை: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தால் விவசாய பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் வெற்றி பெற்ற பின் பகுதி அளவு கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக எதிர்க் கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

தற்போது 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதூ. இந்நிலையில், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக எதிர்க் கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," முழுப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள்.
பயிர்க்கடன் தள்ளுபடி
அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
விவசாயிகள் கவலை
இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள்.
வறட்சி நிவாரணம்
காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, 'ஏற்கனவே கொடுத்துவிட்டோம்' என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
