ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்.. தாய் தந்தையிடம் ஆசி பெற்ற உதயநிதி! கையை பிடித்துக் கொண்ட ஸ்டாலின்!
சென்னை : தமிழக இளைஞர் நலன் மட்டும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் முன்னதாக கலைஞர் படத்திற்கு முன்னால் தனது தந்தை ஸ்டாலின் தாய் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.
தமிழக திரைத்துறையில் தயாரிப்பாளர் விநியோகஸ்தராக அறிமுகம் ஆகி பின்னர் நாயகனாக அரிதாரம் பூசிய உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திமுக பொதுக் கூட்டங்களில் சாதாரண தொண்டன் என கலந்து கொண்டார்.
தொடர்ந்து கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை அக்கட்சியினர் வெகுவாக வரவேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர் சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக களம் இறங்கினார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் போட்டியிட்ட போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எய்ம்ஸ் கட்டப்படவில்லை என ஒற்றை செங்கலை வைத்து அவர் செய்த அரசியல் பலத்த அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது. அதோடு நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் கையில் எடுத்து மிகத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமைச்சர் பதவி
இந்நிலையில் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைக்கு அது தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் கருதிய நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக தரப்பிலும் சரி அரசியல் களத்தில் சரி உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராக போகிறார் என்ற பேச்சுக்கள் தீவிரம் அடைந்தது.

அடுத்தடுத்து பதவிகள்
கடந்த ஆண்டும் இதே டிசம்பர் மாதத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என யூகங்கள் வெளியான நிலையில் அதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அமைச்சராக போகிறார் என்ற பேச்சுக்கள் தீவிரமாக எழுந்தது. சொன்னது போலவே தற்போது அமைச்சராக மாறி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பதிவுகள் தேடி வந்துள்ளது.

மகிழ்ச்சி
ஒருபுறம் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டாலும் அதனை கண்டு கொள்ளாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவே உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல சீனியர் அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சக அமைச்சர்களோடும் முதல்வர் ஸ்டாலினோடும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தாய் தந்தையிடம் ஆசி
முன்னதாக பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தனது தந்தையும் தமிழக முதல்வர் திமுக தலைவர் ஆன ஸ்டாலின் தாய் துர்கா ஸ்டாலின் என இருவரிடமும் கலைஞரின் புகைப்படத்தின் முன்னர் ஆசி பெற்றார் அப்போது முதல்வர் ஸ்டாலின் தனது மகனின் கையைப் பிடித்து தோளில் தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் தற்போது இந்த காட்சிகள் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற குரளோடு திமுக உடன் பிறப்புகள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications