சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன் வரிசைக்கு வரும் உதயநிதி.. விரைவில் கூடும் தமிழ்நாடு சட்டசபை கூட்டம்.. என்ன நடக்கும்? பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனவரி 2ம் வாரத்திற்கு பின் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல்: 8ஆவது முறையாக பாஜக ஆட்சி? புதிய வரலாறு படைக்கத் தயாராகும் தாமரை குஜராத் சட்டசபை தேர்தல்: 8ஆவது முறையாக பாஜக ஆட்சி? புதிய வரலாறு படைக்கத் தயாராகும் தாமரை

அமைச்சரவை

அமைச்சரவை

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 39வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 14ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கில், 14ம் தேதி காலை 9.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பு இன்றி அமைச்சராக செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். இதில் கடவுளின் பெயரில் பதவி ஏற்பேன் என்று சொல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன்பின் ரகசிய காப்பு பிரமாணத்தில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிகழ்விற்கு பல்வேறு நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில்தான் 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனவரி 2ம் வாரத்திற்கு பின் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் பெரும்பாலான சமயங்களில் பொங்கலுக்கு முன்பாக கூட்டத்தொடர் நடக்கும். ஆனால் இந்த முறை பொங்கலுக்கு பின்பாக கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர்

கூட்டத்தொடர்

இதில் உதயநிதி ஸ்டாலினின் இருக்கை எங்கே இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் அமைச்சர். சீனியாரிட்டி படி 10வது அமைச்சராக இருக்கிறார். இந்த வரிசைப்படிதான் அவையில் இடம் ஒதுக்கப்படும். அதன்படி முதல்வர் ஸ்டாலினுக்கு வலதுபக்கம் உள்ள வரிசையில் 10வது இருக்கை அவருக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதாவது முதல் வரிசையிலேயே பெரும்பாலும் உதயநிதிக்கு இடம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

எம்எல்ஏ

எம்எல்ஏ

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்த போது பின் வரிசையில் இருந்தார். பின் வரிசையில் அமைச்சர்களுக்கு பின்பாக அவர் அமர்ந்து இருந்தார். தற்போது முதல் வரிசைக்கு அவர் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு அமைச்சர்களின் இலாக்கா மாற்றப்பட்ட நிலையில், அவர்களின் சீனியாரிட்டியும் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் அவர்களின் இடங்களும் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யனாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

English summary
Udhayanidhi Stalin may get the front row in assembly after CM Stalin cabinet change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X