விஜய்யை எல்லாம் நேரில் பார்க்க முடியாது.. முக்கிய மீட்டிங்கை புறக்கணித்த உதயநிதி ஸ்டாலின் – பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் உடனான முக்கிய மீட்டிங்கை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். மீட்டிங்கிற்கு வரமுடியாது என்று அவர் அரசுக்கு தகவல் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

udhayanidhai-stalin-skips-selection-panel-meeting-with-cm-vijay-to-appoint-information-commissioners

தமிழகத்தில் தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தான் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் நடந்தது.

முதல்வர் விஜய் தலைமையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. தன்னால் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அரசிடம் தெரிவித்த நிலையில் நேற்று அவர் பங்கேற்கவில்லை.

இருப்பினும் இது முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் இடையேயான மோதலை தீவிரத்தன்மையை தான் காட்டுகிறது. இந்த மீட்டிங்கில் முதல்வர் விஜய், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று 3 பேர் மட்டுமே இருப்பார்கள். இதனால் முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது கருத்தை முன்வைக்க வேண்டும். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் முன்கூட்டியே உதயநிதி ஸ்டாலின் தன்னால் அந்த மீட்டிங்கில் பங்கேற்க முடியாது என்று அரசிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திமுகவின் எதிர்க்கட்சி தலைவர் இப்படியான கூட்டத்தை புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி இருந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக முக ஸ்டாலின் இருந்தார். அந்த சமயத்தில் முக ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தந்தை ஸ்டாலின் போலேவே அதேபாணியை உதயநிதி ஸ்டாலினும் பின்பற்றி உள்ளார்.

அதேவேளையில் நேற்று நடந்த தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக்குழு கூட்டத்தில் முதல்வர் விஜய் தலைமையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மட்டுமே பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் (SCIC), 4 மாநில தகவல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பெயர்கள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்அர்லேகர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு அவர்கள் முறையாக பொறுப்பேற்று செயல்படுவார்கள்.

தமிழக தகவல் ஆணையம் ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் 8 மாநில தகவல் ஆணையர்களை கொண்டுள்ளது. மாநில தலைமைத் தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் பி. தாமரைக் கண்ணன், ஆர். பிரியாகுமார், கே. திருமலைமுத்து ஆகியோர் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து காலியாக உள்ள 5 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்எஸ் ராமநாதன் தலைமையில் மாநில அரசு ஜூலை 8ம் தேதி தனிக்குழுவை அமைத்தது. இந்த குழுவினர் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று பரிந்துரைகளை அரசுக்கு வழங்கினர். இந்த பரிந்துரைகளின்படி நியமனங்களை இறுதி செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காததால் முதல்வர் விஜய், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பெயர்களை இறுதி செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+