செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அரசு.. பச்சை குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை! உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துள்ளார். செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அருகே வசித்து வரும் வடிவேலு - பவானி தம்பதியின் 2-வது மகள் 7 வயதே ஆன சிறுமி கடந்த 11 ஆம் தேதி இரவு தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் மாயமானாள்.

Udhayanidhi Stalin

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 10 தனிப்படைகள் அமைத்து குழந்தையை போலீசார் தேடி வரும் நிலையில் 11 நாள் ஆகியும் சிறுமி எங்கே என கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி மாயமாகி 10 நாட்கள் ஆகியும், இதுவரையிலும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமி என்ன ஆனாள்?, அவளின் கதி என்ன? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை நேற்று சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் படையை அறிமுகம் செய்த நிலையிலும் அரசால் செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக் குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+