1000+1000=2000! தலைவிகளுக்கு காத்திருக்கும் பொங்கல் பரிசு! முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் உதயநிதி!
சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதன்படி பொங்கலுக்கு இரு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அக்கட்சி தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் தனது தலைமையில் முதல் முயற்சியிலேயே ஆட்சியையும் கைப்பற்றினார். தொடர்ந்து முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திமுக தேர்தல் அறிக்கை இந்த சட்டமன்றத் தேர்தலில் முக்கிய ஆயுதமாக கருதப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, மாணவிகளுக்கு உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் பெரிய அளவில் குறிப்பாக பெண்களிடம் பேசப்பட்டது.

மாதம் ஆயிரம் ரூபாய்
திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே இலவச பேருந்து பயணம் மாணவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நிதி நிலைமை சரியில்லாததால் தற்போதைக்கு அந்தத் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தேர்தல் அறிக்கை
இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டத்தையுமே நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக பாஜக, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இந்த விவகாரங்களை வைத்து தீவிர அரசியல் செய்தனர். ஒருபுறம் பொதுமக்களிடமும் இந்த திட்டம் குறித்தான கேள்விகள் அடிக்கடி தொடங்கியது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் திட்டம் இந்த முறை ரொக்கமாகவும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

உரிமைத் தொகை
அதோடு பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கலாம் எனவும் சில தகவல்கள் உலாவுகின்றன. மகளிர் தினத்தன்று இந்த திட்டம் தொடங்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக அமைச்சரவையில் இணைந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு எப்போது உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து பேசி இருக்கிறார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆலோசிக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் துணை பொருளாதார குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக ஆலோசனைகளும் நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து இதற்கான நடைமுறைகளை தொடங்க முதல்வர் ஸ்டாலினும் ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியானது. இப்படி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னையில் நேற்று இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனக் கூறியிருக்கிறார்.

விரைவில் அறிவிப்பு
இதனால் பொங்கல் பரிசுத் திட்டத்தோடு பெண்களுக்கு உரிமை தொகையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் மாதம், ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என இரட்டிப்பு பரிசு பொங்கலுக்கு காத்திருக்கிறது என உற்சாகமாக கூறிய வருகின்றனர். திமுகவினர் அதே நேரத்தில் மார்ச் மாதத்திலும் இது தொடர்பான அறிவிப்பு தள்ளிப் போகலாம் என இரு வேறு தகவல்கள் உலாவுகிறது. எது எப்படி பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான உரிமைத் தொகை இன்னும் சில நாட்களுக்குள் வழங்கப்படும் என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications