அமைச்சராக முதல் நிகழ்ச்சி.. வெற்றியோ-தோல்வியோ முயற்சி செய்யுங்க..மாணவர்களை உற்சாகமூட்டிய உதயநிதி
சென்னை: தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். இந்நிலையில் முதல் நிகழ்ச்சியில் அவர் இன்று பங்கேற்றார். அப்போது ‛‛ஜெயிக்கிறோமோ, தோற்கிறமோ என்பதை தாண்டி, முயற்சி செய்ய வேண்டும். அதுவே பெரிய வெற்றி தான்'' என தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள 177 மாணவ-மாணவிகள் மத்தியில் பேசி உற்சாகப்படுத்தினார்.
இந்தியா முழுவதும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நலன் கருதி நாடு முழுவதும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் இடையே ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆந்திர மாநிலம் குண்டூரில் வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் மொத்தம் 4,336 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள 8 ஏகலைவா பள்ளியில் இருந்து 177 மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் சென்னை வழியாக ஆந்திரா செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் நிகழ்ச்சியாக இன்று ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

இதற்காக 177 பேருக்கு சென்னை மேல்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஒரு மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் செல்ல உள்ளனர். இந்த வேளையில் மாணவ-மாணவிகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, ‛‛விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் அனைவருக்கும் நன்றாக பயிற்சி கொடுத்து இருப்பார்கள் என நம்புகிறேன். நீங்களும் நன்கு பயிற்சி பெற்றிருப்பீர்கள். நீங்கள் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள். பாராட்டுகள். ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ என்பது முக்கியம் இல்லை. ஒரு முயற்சி எடுக்கிறோம். அதுவே பெரிய வெற்றி தான்'' என பேசி உற்சாகமூட்டினார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications