டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு?
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையும் சொத்து ரூ.12.92 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ.7.72 கோடியாகவும் உள்ளது. அதேபோல் ரூ.1 கோடி மதிப்பிலான டிஃபெண்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில், திமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாறுவதாக பேசப்பட்ட சூழலில், அவர் மீண்டும் அதே போட்டியிடும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது திமுக எம்பி தயாநிதி மாறனும் உடனிருந்தார்.
இதன்பின் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வேட்புமனு மூலமாக தெரிய வந்துள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினுக்கு மொத்தமாக ரூ.20.64 கோடி சொத்து உள்ளது. அசையும் சொத்து ரூ.12.92 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ.7.72 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.1 கோடி மதிப்பிலான டிஃபெண்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனது பெயரில் தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இல்லை என்றும் வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10.5 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications