சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலில் இலங்கை.. அடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.. டி20 உலகக்கோப்பையில் அசரடிக்கும் "அண்டர்டாக்ஸ்"

Google Oneindia Tamil News

சென்னை: சாம்பியன் அணிகளான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அண்டர்டாக்ஸ் அணிகளான ஸ்காட்லாந்து, நமிபியாவிடம் தோல்வியடைந்துள்ளது டி20 உலகக்கோப்பைக்கான மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த டி20 உலகக்கோப்பையில், முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணி வீழ்த்தியது. யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியை நமிபியா அணி பெற்றது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேர ட்விஸ்ட்! உத்தவ் அணிக்கு வெற்றி கன்பார்ம் மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேர ட்விஸ்ட்! உத்தவ் அணிக்கு வெற்றி கன்பார்ம்

மாஸ் காட்டும் அண்டர்டாக்ஸ்

மாஸ் காட்டும் அண்டர்டாக்ஸ்

அதுமட்டுமல்லாமல் நமிபியா அணியில் 3 ஆல் ரவுண்டர்கள், 3 இடதுகை பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் என அனைத்துவிதமான கிரிக்கெட் வீரர்களையும் அணியில் வைத்திருந்தது ரசிகர்களை ஈர்த்தது. நமிபியா அணி கொடுத்த ஆச்சரியம் ஒருபக்கம் இருக்க, டி20 உலகக்கோப்பையை இருமுறை வென்ற சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியுள்ளது.

மிகப்பெரிய விளம்பரம்

மிகப்பெரிய விளம்பரம்

அதிலும் 52 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸை அணியை, 78 ரன்களுக்கு 8 விக்கெட் என்ற நிலைக்கு கொண்டு வந்து ஸ்காட்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பெரிதாக விளம்பரமே செய்யப்படாத டி20 உலகக்கோப்பை தொடருக்கு, மாபெரும் விளம்பரத்தை முதல் இரு நாட்களில் அண்டர்டாக்ஸ் அணிகள் என்று கருதப்பட்டவர்கள் வழங்கியுள்ளனர்.

டி20 கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்

இதன் மூலம் ஏன் உலகக்கோப்பை போன்ற தொடர்களுக்கு சிறிய அணிகள் இருக்க வேண்டும் என்ற பதிலையும் சேர்த்தே இரு அணிகளும் கொடுத்துள்ளனர். 20 வடிவ கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய திட்டம் என்பது தேவையில்லை. வேகமான ஆட்டம் கைமாறும் வடிவமான டி20 கிரிக்கெட்டிற்கு, சிறிய அளவிலான திட்டங்களே போதுமானவை. இங்கே சூழலை கருத்தில் கொண்டு உடனுக்குடன் முடிவுகளை எடுக்கும் வீரர்களும், கேப்டன்களுமே வெற்றியைப் பெறுவார்கள்.

அண்டர்டாக்ஸ்

அண்டர்டாக்ஸ்

அதேபோல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தேவைப்படும் அளவிற்கு திறனும், திட்டங்களும் கூட தேவையில்லை. ஆரம்ப திட்டங்களோடு களத்தில் எடுக்கும் முடிவுகளும், வீரர்களின் திறமையும் டி20 கிரிக்கெட்டில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும். அதனை அண்டர்டாக்ஸ் அணிகள் சரியாக புரிந்து வைத்துள்ளதே, இத்தகைய வெற்றிகளுக்கு காரணம்.

எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை தேவை

ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தட்பவெப்பம், மைதானங்களின் தன்மை ஆகியவை சிறிய அணிகளான நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நமிபியா போன்ற அணிகள் ஓரளவிற்கு பழக்கப்பட்டவை. அதனால் வரும் நாட்களில் சிறிய அணிகளுடனும் பெரிய அணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

அசத்தல் தொடக்கம்

அசத்தல் தொடக்கம்

ஏனென்றால் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், அந்த அணி வீட்டிற்கு செல்ல வேண்டியது தான். இந்த டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்த அணி ராஜா, இந்த அணி சாம்பியன் என்று உறுதிப்படுத்தவே முடியாது. இந்த உலகக்கோப்பை இந்தியாவுக்கா, இங்கிலாந்துக்கா, ஆஸ்திரேலியாவுக்கா என்ற பார்த்திருந்த ரசிகர்கள், இப்போது இந்த உலகக்கோப்பை அண்டர்டாக்ஸ் அணிகளுக்கானது என்று பேச தொடங்கிவிட்டார்கள்.

English summary
Champion teams Sri Lanka and West Indies lost to underdogs Scotland and Namibia in the biggest advertisement for the T20 World Cup
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X