வானில் தோன்றிய அதிசயம்.. பழைய ஆம்பாசிடர் காரில் விஐபி!தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சென்ட்டிமெண்ட்
சென்னை: தமிழக அரசியலில் சென்ட்டிமெண்ட்கள் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு எழுதப்படாத தேர்தல் விதியாகவே பல வருடங்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.. அதுவும் தேர்தல் காலங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாளில் இருந்தே இந்த சென்ட்டிமெண்ட் விளையாட்டு தொடங்கிவிடுகிறது.. அப்படியான சென்ட்டிமெண்ட்கள் இந்த தேர்தலிலும் நடந்து, வாக்காளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அன்றைய முதிர்ச்சியான தலைவர்கள் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை அரசியல்வாதிகள் வரை தங்களுக்கு என ஒரு ராசியான நேரம், திசை மற்றும் தேதியை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்..

சிலர் குறிப்பிட்ட கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்திய பிறகே வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்கள், இன்னும் சிலர் தங்களுக்கு ராசியான நிறத்தில் உடை அணிவதையோ அல்லது ராசியான வாகனத்தில் செல்வதையோ பெரும் கவுரவமாகவும் வெற்றிக்கான படிக்கட்டாகவும் கருதுகிறார்கள்..
வேட்புமனு தாக்கல்
முக்கியமாக வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களைத் தவிர்த்து, சுப முகூர்த்த நேரத்திற்காகக் காத்திருந்து மனு அளிப்பதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்..
தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும்போது ஒரு குறிப்பிட்ட ஊரில் இருந்து தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்கிற சென்ட்டிமெண்ட் இன்றும் ஆழமாகப் பதிந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது..
உதாரணமாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கும் இடமும், அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நேரமும் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாகவே இருக்கும்.. இந்த பழக்கம் இப்போதுள்ள வேட்பாளர்களிடமும் அப்படியே தொடர்கிறது, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது கையில் பிடிக்கும் பேனா முதல் உடன் அழைத்து செல்லும் நபர்கள் வரை அனைத்திலும் ஒரு சென்ட்டிமெண்ட் கணக்கைப் பார்த்துதான் அரசியல் களத்தில் காய் நகர்த்துகிறார்கள்..
பழைய அம்பாசிடர் கார்
இதோ நேற்றைய தினமும் 2 சம்பவங்கள் நடந்துள்ளன.. கடலூர் மாவட்ட திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான முட்டம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி.. இவரது அரசியல் வாரிசான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது தந்தை மீதான பற்று மற்றும் தேர்தல் சென்ட்டிமெண்ட்டை இப்போதும் மிக உறுதியாகப் பின்பற்றி வருகிறார்..
கடந்த 1988ம் ஆண்டு அவரது அப்பா வாங்கிய டி.ஏ.எப். 1333 என்ற பதிவு எண் கொண்ட அம்பாசிடர் காரை, சுமார் 38 ஆண்டுகளைக் கடந்தும் அவர் பொக்கிஷமாகப் பராமரித்து வருகிறார்.
வழக்கமான பயணங்களுக்கு நவீன ரக பார்ச்சூனர் காரை பயன்படுத்தினாலும், தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் என்று வந்துவிட்டால் மட்டும் இந்த பழைய அம்பாசிடர் காரை எடுப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்..
அதன்படி குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த அமைச்சர், தனது வீட்டில் இருந்து தானே அந்த காரை ஓட்டி வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. இந்த பயணத்தில் விசிக தலைவர் திருமாவளவனும் அவருடன் காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது..
வானில் கருடன்
அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில், தேர்தல் களத்தில் ஒரு வினோதமான "கருடன் சென்ட்டிமெண்ட்" வேட்பாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.
அதாவது பிரச்சாரத்திற்காக வேட்பாளர்கள் கிராமங்களுக்குச் செல்லும் போது, எதிர்பாராத விதமாக வானில் கருடன் வட்டமிடுகிறார்களாம்.. ஒருமுறை அல்ல, 2 முறை அல்ல, ஒவ்வெரு முறையும் இவர்கள் எங்கு பிரச்சாரத்துக்கு போனாலும் அங்கே வானில் கருடன் வந்துவிடகிறதாம்.. இதை பார்த்ததும் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் அது வெற்றிக்கான தெய்வீக அறிகுறி என நம்பி குஷியாகி விடுகிறார்கள்.
ஆஹா வெற்றி நமதே
வானில் கருடன் தெரிந்தாலே "ஆஹா வெற்றி நமதே" என ஆதரவாளர்கள் முழக்கமிட, முதியவர்களும் இது ஒரு நல்ல சகுனம் என வேட்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்களாம்.. இந்த சென்ட்டிமெண்ட் காரணமாகவே இப்போது வேட்பாளர்கள் எந்த கிராமத்திற்குப் பிரச்சாரத்திற்குச் சென்றாலும், தங்கள் வருகையின் போது வானில் கருடன் தோன்றுமா என்று ஆவலோடு எதிர்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது..
உண்மையில் அந்த பகுதியில் இயல்பாகவே கருடன்கள் வட்டமிடுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தேர்தல் களம் என்பதால் அரசியல்வாதிகள் அதனைத் தங்களுக்குச் சாதகமான ஒரு ராசியாகவே பார்க்கிறார்கள்
எந்த கட்சி வேட்பாளர் வந்தாலும் கருடன் பாரபட்சமின்றி வானில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டுச் சென்றாலும், "கருடன் நமக்குத்தான் ஆசி வழங்குகிறது" என்று ஒவ்வொரு வேட்பாளரும் மனப்பூர்வமாக நம்பி தேர்தல் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்களாம்.
பழைய அம்பாசிடர் கார்
இப்படி ஒருபுறம் தந்தை பயன்படுத்திய பழைய வாகனத்தை ராசியாகக் கருதிப் பராமரிக்கும் அமைச்சரின் செயலையும், மறுபுறம் இயற்கை நிகழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமான சகுனமாகப் பார்க்கும் வேட்பாளர்களின் நம்பிக்கையையும் பார்க்கும்போது, தமிழக அரசியலில் சென்ட்டிமெண்ட்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தகைய நம்பிக்கைகள் வேட்பாளர்களுக்குத் தேர்தல் களத்தில் ஒருவிதமான மனவலிமையையும் உற்சாகத்தையும் தருவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. இன்னும் தேர்தல் முடியும்வரை இன்னும் என்னென்ன சென்ட்டிமெண்ட்கள் நடக்க போகுதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க! -
அமைச்சர் துரைமுருகன் சொத்து மதிப்பு எவ்வளவு.. மனைவி பெயரில் மட்டும் ரூ.59 கோடி சொத்து! -
எடப்பாடிக்கு அதிர்ச்சி! திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை -
மீண்டும் திமுக ஆட்சி.. மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்! கிட்ட கூட வராத விஜய்.. புது கருத்துக்கணிப்பு -
“விசில் ஊதினால் போதும்.. குழந்தைகளுக்கு சளி நின்றுவிடும்”.. தவெக செங்கோட்டையன் விநோத பிரச்சாரம்! -
சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மட்டும் இல்லை.. நாடே உற்று பார்க்கும் 27 விஐபி தொகுதிகள்.. லிஸ்ட் -
பணிந்தார் கமல்ஹாசன்.. விருப்பமனு கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் -
ஆடு 1000.. எருமை 55,000, மனுஷன் விலை இவ்வளவுதானா? சீமான் வெளியிட்ட அதிர்ச்சி கணக்கு! #Election2026 -
மக்கள் நீதி மய்யத்தில் ஒரு 'வசூல்ராஜா'! அந்த ரூ. 30 லட்சம் வளர்ச்சி நிதிக்கு! கறார் காட்டினாரா கமல்? -
பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
திமுக ஒரே ஒரு சின்ன தோசை.. தவெக கல்யாண விருந்து குளோஸ்.. காங்கிரஸ் டீலிங் உடைத்த பிரவீன் சக்ரவர்த்தி












Click it and Unblock the Notifications