மறக்க முடியாத 2021: சசிகலாவின் சிறை விடுதலை... ஆன்மீக பயணம் டூ அரசியல் பயணம்
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு மறக்கமுடியாத ஆண்டாக 2021ஆக அமைந்து விட்டது.
சென்னை: சிறையில் இருந்து விடுதலையான போதே தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்த சசிகலா, அரசியல் ஓய்வு பற்றி அறிவித்து விட்டு ஆன்மீக பயணம் கிளம்பினார். சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் யுடர்ன் அடித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். 2021ஆம் ஆண்டு சசிகலாவிற்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது.
எனது காலத்திற்குப் பிறகும் 200 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்று சட்டசபையில் சபதம் செய்தார் ஜெயலலிதா. அவரது மரணத்திற்குப் பிறகு முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் சசிகலா.
அதோடு நிற்காமல் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற ஆசையில் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். இதனையடுத்து ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்து மவுன யுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். அதிகார போட்டியில் கட்சி உடைந்தது.
சசிகலா தலைமையில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் செல்ல, ஓ.பன்னீர் செல்வம் பக்கம் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே சென்றனர். முதல்வர் கனவில் மிதந்த சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செக் வைத்தது. கோட்டைக்கு முதல்வராக போக ஆசைப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போனார்.
சிறை செல்லும் முன்பாக எம்எல்ஏக்கள் ஒன்று கூடி எடப்பாடிபழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். கூவாத்தூர் ரிசார்ட்ஸ்சில் நடந்த கலாட்டாக்களை அத்தனை எளிதாக யாரும் மறந்து விட முடியாது. சசிகலா சிறைக்கு போன சில மாதங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக இணைந்தனர். டிடிவி தினகரன் தனித்து விடப்பட்டார்.

சசிகலா விடுதலை
நான்கு ஆண்டுகால சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை சென்றார். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானார். கொரோனா தொற்று ஏற்படவே மருத்துவமனையில் ஓய்வெடுத்துக்கொண்ட சசிகலா பிப்ரவரியில் தமிழகம் வந்தார்.

சசிகலாவிற்கு வரவேற்பு
பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார் டிடிவி தினகரன். அப்போது மைக் பிடித்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பேசிய சசிகலா தமிழக மக்கள், தொண்டர்களின் வேண்டுதலால் நலம் பெற்று திரும்பியிருக்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன் என்று கூறினேன் சசிகலா.

மார்ச் மாதம் அரசியல் ஓய்வு
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் எனில் தான் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறினார் சசிகலா. மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்ட சசிகலா,நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

குல தெய்வ வழிபாடு
அரசியல் துறவறம் பூண்ட சசிகலா ஆன்மீக பயணம் கிளம்பினார். குல தெய்வ கோவிலில் வழிபட்டு விட்டு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர், திருச்செந்தூர் என கோவில் கோவிலாக சென்று யாகம் நடத்தினார்.

சசிகலாவின் யு டர்ன்
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் சசிகலா. ஆட்சியையும், கட்சியையும் மீட்க வேண்டிய சூழல் இருப்பதாக தொண்டர்களிடம் பேசினார். இதன்காரணமாக சசிகலாவுடன் தொடர்பில் இருந்த நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியது.

ஜெ.நினைவிடம் சென்ற சசிகலா
அதிமுக பொன்விழா ஆண்டன்று, தி. நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி, கழக பொதுச்செயலாளர் என கல்வெட்டு வைக்கப்பட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா சமாதிகளுக்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார்.

தொண்டர்களை சந்தித்த சசிகலா
அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, ஆதரவாளர்களை சந்தித்தார்.
அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறிய சசிகலா, அதிமுகவை மீட்க கிராமம் கிராமமாக அரசியல் பயணம் கிளம்பினார். அதிமுகவை கைப்பற்றுவதில் தீவிரமாகவே இருக்கிறார் சசிகலா. தீபாவளி நாளில் சபதமே செய்துள்ளாராம் சசிகலா.

இரட்டை தலைமைதான்
அதிமுகவை கைப்பற்றி பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பது சசிகலாவின் கனவு. ஆனால் சசிகலாவிற்கு அதிமுகவில் என்றும் இடமில்லை என்றே ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கூறினர். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஓபிஎஸ் இபிஎஸ் அதிமுகவில் இரட்டைத் தலைமைதான் என்றும் தெரிவித்து விட்டனர்.

2021 மறக்கமுடியாத ஆண்டு
தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு போயஸ்கார்டன் வீட்டில் இடமில்லை. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் தீபா வசமாகி விட்டது. மொத்தத்தில் சசிகலாவிற்கு 2021ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications