சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Budget 2021: நிர்மலாவை நோக்கி பாயும் டிமாண்டுகள்.. லிஸ்ட் போட்டு சலுகைகளை கேட்கும் ஹோட்டல் ஓனர்கள்

வரிச்சலுகைகளை எதிர்நோக்கி உள்ளனர் ஓட்டல் உரிமையாளர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2 வருடங்களாகவே ஓட்டல் மற்றும் சுற்றுலா துறைகள் முடங்கிபோயுள்ள நிலையில், வரப்போகும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சலுகையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் ஓட்டல் ஓனர்கள்...!

கடந்த வருடம் கொரோனாவைரஸ் பரவலினால் சந்தித்த அதே பிரச்சனைதான் இந்த வருடமும் தலைதூக்கி உள்ளது.. 2 வருடமாகவே பல்வேறு தொழில்களில் முடக்கம் ஏற்பட்டு, நஷ்டத்தில் கொண்டு போய் விட்டுள்ளது.. இதனால் நாட்டின் பொருளாதாரமே அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.

அதிக அளவு நஷ்டத்தை சம்பாதித்த துறைகளில் ஒன்றுதான், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை... கொரோனா ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு பக்கம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் தடுப்பு கட்டுப்பாடு முறைகளும் கடுமையாகவே கடைபிடிக்கபட்டு வருகின்றன.

கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்! கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!

 சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

எப்போது லாக்டவுன் அறிவித்தாலும் அதில் பிரதான அறிவிப்பாக இருப்பது ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகளை மூடுவதுதான்.. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது... இதனால், ஓட்டல்கள், ரெஸ்ட்டாரண்டுகளின் உரிமையாளர்கள் நேரடியாகவே பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.. அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான உணவகங்களில் வாடிக்கையாளர்கள் பெரிதும் குறைந்துள்ள நிலையில், ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கி உள்ளனர்.

 எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள்

விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சில எதிர்பார்ப்புகளையும், முக்கிய கோரிக்கைகளையும் அவர்கள் விடுக்க ஆரம்பித்துள்ளனர்.. இந்த கொரோனாவால் ஓட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்டுகள், காட்டேஜ்கள் மற்றும் சுற்றுலா துறையில் உள்ள டிராவல் ஏஜென்சிகள் நலிவடைந்து விட்டன.. விமான போக்குவரத்து தடை காரணமாக, இந்தியாவுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.. கடந்த 2019-ல் சுற்றுலா துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.8 சதவீதமாக இருந்தது.. ஆனால், கொரோனா தாக்கம் இந்தியாவில் நுழைந்ததுமே, அதாவது 2020 இந்த உற்பத்தி வீதமான 4.7 ஆக குறைந்துவிட்டது..

 ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

இதுக்கு காரணம், பல்வேறு மாநிலங்களில் பயண கட்டுப்பாட்டு தடை விதிக்கப்பட்டதுதான்.. மேலும் ஹோட்டல்களில் யாரும் தங்க அனுமதி இல்லாதது, தடுப்பூசி கொள்கைகள் போன்றவை எல்லாம் மொத்தமாக வந்து இந்த தொழிலை பாதித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே, ஓட்டல் துறையில் வரிச்சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர்..

நஷ்டம்

நஷ்டம்

இந்த 2 வருடமாகவே அளவுக்கதிகமான நஷ்டத்தை சந்தித்தால், இந்த வரிச்சலுகைகள் வேண்டும் என்கிறார்கள்.. தவிர, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிக்கடன்களில் சலுகைகளையும் கேட்க துவங்கி உள்ளனர்.. லாக்டவுன் தளர்வுகளில் ஓட்டலை திறக்க அனுமதித்தாலும், பொதுமக்கள் பெரும்பாலும் பார்சல் மற்றும் டெலிவரிகளையே விரும்புவதால் தங்களுக்கு அதன்மூலமும் நஷ்டம்தான் என்று உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.. இதைதவிர சுற்றுலாவை நம்பி இருப்பவர்களும் வெகுவாக பாதிக்கப்படுவதால், இந்த சலுகைகள் அனைத்தும் பட்ஜெட்டில் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இந்திய தேசிய உணவக சங்கம் (என்ஆர்ஏஐ), கடந்த ஜனவரியில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், கொரோனாவால் 25 சதவீதம் ரெஸ்டாரெண்ட்டுகள் மூடப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தது.. இந்நிலையில், மாசிவ் ரெஸ்ட்டாரண்ட்டின் உரிமையாளர் ஜோராவர் கல்ரா என்பவர் சொல்லும்போது, "இந்த லாக்டவுன் சமயத்தில் அளவுக்கு அதிகமாகவே கஷ்டப்பட்டு விட்டோம்.. கடினமான காலத்தில் இயங்கியும் வருகிறோம்.. ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிக்கடன்கள் (ஐடிசி) மீட்டெடுக்க வேண்டும் என்கிறார்..

 லாக்டவுன்

லாக்டவுன்

சமீப காலமாக இந்த தொழிலில் வருமானம் இல்லை என்பதால், அதை கைவிட வேண்டிய நிலைமையில் தாங்கள் இருக்கிறோம் என்றும் வருத்தத்துடன் சொல்கிறார்.. அதுமட்டுமல்ல, லாக்டவுன் சமயத்தில் கையில் இருந்த முதலீட்டையும் செலவழித்து விட்டதால், தொழிலை மீண்டும் சீரமைக்க வேண்டி உள்ளது.. அதனால், குறைந்த வட்டியில் கடன் வேண்டும், முக்கியமாக ஓட்டல்கள் மீது விதிக்கப்படும் வரிகளை குறைக்க வேண்டும்.. சுற்றுலா துறைக்கு வரிகள் மூலம் நிறைய அழுத்தம் தரக்கூடாது.. மாறாக, வரிச்சலுகையை எதிர்நோக்கி இருக்கிறோம்" என்றெல்லாம் மிக முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Recommended Video

    இந்த அறிவிப்பு மட்டும் வந்தால்.. Work From Home பண்றவங்களுக்கு ஜாலிதான்! | Oneindia tamil
     அபராத வட்டி

    அபராத வட்டி

    வருமான வரி, ஜிஎஸ்டி. வரி, கடனுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு, திருப்பி செலுத்தும் காலத்தை அதிகரிப்பது, வட்டி விகிதத்தை குறைப்பது என்று எந்த சலுகையையும், ஓட்டல் அதிபர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் உள்ளது.. மேலும், சொத்து வரி, தண்ணீர் வரி, கழிவு நீர் வரி, மின்சார கட்டணம் என்று மூடி கிடந்த ஓட்டல்களுக்கும் சலுகைகள் தரப்படவிலலை.. இதைதவிர பெரும்பாலான ஓட்டல்கள், வாடகை கட்டடங்களில்தான் இயங்கி கொண்டிருக்கின்றன.. எனவே இதையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே இவர்களின் பொதுவான கோரிக்கையாக எழுந்துள்ளது..!

    English summary
    union budget 2022: Travel hospitality sector wants tax incentives policy support in Union budget 2022
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X