சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட் 2022: இந்த ஆண்டு செல்போன்கள், டி.வி.க்கள் விலை குறையுமா?.. எகிறும் எதிர்பார்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் மொபைல் போன்கள், டிவிக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் செல்போன்கள், டிவிக்கள் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் நியமனம்

 மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும், பிப்ரவரி 1ம் தேதி காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இரண்டாவது முறையாக காகிதம் இல்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முதல் ஃபின்டெக் நிறுவனங்கள் வரை மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

 எலக்ட்ரானிக் துறையில் மாற்றம்

எலக்ட்ரானிக் துறையில் மாற்றம்

சில்லறை விற்பனைத் துறையில் பல்வேறு பகுதிகள் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கோரிக்கைகளைக் கொண்டிருந்தாலும், குறிப்பாக எலக்ட்ரானிக் துறையில் மாற்றம் காணப் போகிறது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன்களின் பாகங்கள் அல்லது துணை பாகங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு திருத்தப் போகிறது என்று கூறப்படுகிறது.

 ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்

ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்

சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (SPPL) துணைத் தலைவர் பல்லவி சிங் கூறுகையில், ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக மூலப்பொருட்களில் கிடைப்பதை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை அரசு குறைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், தொலைக்காட்சிகளில் ஜிஎஸ்டி குறைப்பு மிகவும் அவசியம்' என்று அவர் கூறினார்.

'மேக் இன் இந்தியா' ஊக்குவிக்க வேண்டும்

'மேக் இன் இந்தியா' ஊக்குவிக்க வேண்டும்

SPPL இன் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறுகையில், 'இந்திய உற்பத்தி மற்றும் MSME களை அதிகரிக்க, எங்களுக்கு நிலையான ஜிஎஸ்டி வரி அடுக்கு தேவை. எந்தப் பொருளும் 18 சதவீத அடுக்குக்கு மேல் இருக்கக்கூடாது, மேலும் சந்தை உணர்வை மேம்படுத்த நுகர்வோர்வாதத்தை இப்போது ஊக்குவிக்க வேண்டும் மேக் இன் இந்தியா முயற்சிகளை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Recommended Video

    Raghuram Rajans Key Things For Union Budget 2022 | Oneindia Tamil
    செல்போன்கள், டிவிக்கள் விலை குறையுமா?

    செல்போன்கள், டிவிக்கள் விலை குறையுமா?

    மொபைல் போன்கள், டிவிக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. அப்படி எலக்ட்ரானிக் பொருட்கள் மீதானவரி திருத்தப்படும் பட்சத்தில் செல்போன்கள், டிவிக்கள் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    As the union budget approaches, there is a growing demand for lower taxes on electronics, including mobile phones and TVs. Will this reduce the price of cell phones and TVs?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X