Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2026: ஹோம் லோன் கட்டுபவர்களுக்கு குறையப் போகுது சுமை? வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை? நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன் வட்டி மற்றும் மருத்துவக் காப்பீடு செலவுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பழைய வரி விதிப்பு முறையிலிருந்து விலகி, தற்போது புதிய வரி விதிப்பு முறைதான் முக்கிய தெரிவாக மாறி வரும் நிலையில், வரி விகிதங்களில் சற்று தளர்வு ஏற்படுத்தும் சமநிலையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், புதிய வரி முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது.

Budget 2026 Union Budget 2026 home loan

மத்திய பட்ஜெட் 2026

அதில், வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி தொகை மற்றும் மருத்துவக் காப்பீடு தவணைகளுக்கு வருமான வரி சலுகைகள் வழங்கப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. மருத்துவ பணவீக்கம் தற்போது 11.5 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. இது ஆசிய நாடுகளில் மிக உயர்ந்த மருத்துவ பணவீக்க விகிதங்களில் ஒன்றாகும்.

ஜிஎஸ்டி விலக்கு

இதனால் நடுத்தர மற்றும் குறைந்த வருமான மக்களுக்கு மருத்துவச் செலவுகள் பெரும் சுமையாக மாறியுள்ளது. முன்னதாக, மருத்துவக் காப்பீடு தவணைகளுக்கான ஜிஎஸ்டி விலக்கு, காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதி போன்ற நடவடிக்கைகள் மூலம் சுகாதாரத் துறைக்கு அரசு ஊக்கம் அளித்துள்ளது. இருப்பினும், மருத்துவ சேவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூடுதல் வரிச் சலுகைகள் அவசியம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

வீட்டுக் கடன் வரிச்சலுகை

இந்த பின்னணியில், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் மத்திய அரசிடம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, புதிய வருமான வரி முறையில் வீட்டுக் கடன் வட்டியை மீண்டும் வரிச் சலுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், மருத்துவக் காப்பீடு தொடர்பான 80D பிரிவின் கீழ் வழங்கப்படும் வரம்பை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

புதிய வரி முறை

தற்போது தனிநபர் மற்றும் குடும்பத்திற்கு ரூ.50,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.1 லட்சமாகவும் இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 25 சதவிகித வரி விகிதம் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வாழ்வாதாரச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய சலுகைகள் மக்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைத்து, நிம்மதியை வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மருத்துவக் காப்பீடு வரிச்சலுகை

இந்த வகையான வரிச்சுமை குறைப்புகள் அமலுக்கு வந்தால், சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் முதலீடுகளுக்கு அதிகமாக முன்னுரிமை அளிக்க முடியும் என்றும், சேமிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட் 2026 விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மருத்துவக் காப்பீடு தவணைத் தொகைகளில் சலுகை வழங்கப்பட்டால், அதிகமான மக்கள் காப்பீடு பெற முன்வருவார்கள். இதன் மூலம், முன்னெச்சரிக்கை மருத்துவ நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார அழுத்தம்

தற்போது இந்தியாவின் சுகாதாரச் செலவுகள் உலக சராசரியைவிடக் குறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஆரம்பநிலை மருத்துவமனைகள் மற்றும் தடுப்பு சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம், மருத்துவச் செலவுகளால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார அழுத்தத்தை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+