வெறும் 4% தான்.. பென்சன் முறை மாறப்போறீங்களா? உடனே இதை கவனியுங்கள்.. மத்திய அரசின் முக்கிய முடிவு
சென்னை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) இதுவரை வெறும் 4 சதவிகித மத்திய அரசு ஊழியர்களே மாறி உள்ளதாக கூறப்டுகிறது. மத்திய அரசு எதிர்பார்த்ததை விட இது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் இத்திட்டத்திற்கு மாற அவகாசம் கிடைத்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 அன்று அமலுக்கு வந்தது.
தேசிய ஓய்வூதியத் திட்டம்
முன்னதாக, ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருந்த ஊழியர்கள், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், மற்றும் இறந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் பெற்றனர். பின்னர், இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசில் ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் தங்கள் படிவங்களை நேரடியாகவோ அல்லது பயிற்சி நிலையத் தலைவரிடமோ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்கள் DDO-க்கு அனுப்பப்பட்டு, நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) உருவாக்கப்படும்.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒரே ஒருமுறை மட்டுமே மாற நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்போ இந்த மாற்றத்தைச் செய்யலாம். ஒரு முறை ஓய்வூதிய முறையை மாற்றிய பிறகு, மீண்டும் அதை மாற்ற முடியாது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
பணி நீக்கம் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த வசதி பொருந்தாது. ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டால், ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தின் பலன்களுக்குத் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள். அரசு வழங்கும் 4% கூடுதல் பங்களிப்பு, வெளியேறும் நேரத்தில் ஊழியரின் NPS கணக்கில் சேர்க்கப்படும்.
மத்திய அரசு 2024-ல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த இத்திட்டம், ஓய்வூதியப் பாதுகாப்பில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது. NPS-க்கு மாற்றாக அமைக்கப்பட்ட UPS, அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாத ஓய்வூதியத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றின் முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறை, ஊழியரின் பங்களிப்பு மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான முழுமையான விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். யுபிஎஸ் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற, 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்குக் குறைவான சேவை காலம் கொண்டவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட, ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். யுபிஎஸ் திட்டத்தின் கீழ், 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதத்திற்கு ₹10,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications