அமெரிக்கா + நிர்மலா.. பங்கு சந்தையில் ஒரே நாளில் 10 லட்சம் கோடி இழப்பு.. பின்னணி என்ன
சென்னை: பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் நேற்று பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அப்படி கூப்பிட்டு விருந்து வைத்ததற்கு வேலையை காட்டிவிட்டது பங்குசந்தை.. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் பின்னணி பற்றி பார்ப்போம்.
நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது எல்லாருக்குமே தெரியும். பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். அப்படி நடந்தால் பங்குச்சந்தைகள் வர்த்தகம் அமோகமாக இருக்கும். இதனை எதிர்பார்த்து தான் நேற்று ஞாயிறு என்ற போதிலும் பங்கு சந்தைகள் இயங்கின, முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இருந்தார்கள்.ஆனால் பேரிடியாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. பட்ஜெட்டில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வரியை அறிமுகம் செய்த நிர்மலா
தற்போது சந்தையில் நிலவும் அதிகப்படியான யூக அடிப்படையிலான வணிகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பங்குச்சந்தைகளில் பங்குகள் பரிவர்த்தனையின்போது செலுத்தப்படும் வரியான பங்குச்சந்தை பரிவர்த்தனை வரியை (எஸ்.டி.டி.) உயர்த்தி அறிவித்தார். இதன்படி பியூச்சர்ஸ் மீதான வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு அறிவிப்பு பங்குச்சந்தைகளில் நேரடியாக எதிரொலித்தது.
தேசிய பங்கு சந்தை
இதனால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்தது. ஒரு கட்டத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் 2 ஆயிரத்து 300 புள்ளிகள் வரை சரிந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருந்தது.
நிப்டி வர்த்தகம்
பின்னர் வர்த்தக முடிவில் இழப்பில் இருந்து சற்று மீண்டது. இருப்பினும் நிப்டி ஐ.டி. குறியீட்டை தவிர மற்ற அனைத்து சேவை குறியீடுகளும் 2 சதவீதம் அளவில் சரிந்தன. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 1,843 புள்ளிகள் அதாவது 2.23 சதவீதம் சரிந்து 80 ஆயிரத்து 722 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 593 புள்ளிகள் (2.33 சதவீதம்) சரிந்து 24 ஆயிரத்து 825 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்கா முக்கியமான காரணம்
நேற்று பங்குச் சந்தையில் ஏற்பட்ட அந்தப் பெரும் சரிவு முதலீட்டாளர்களை நிலைதடுமாறச் செய்தது.இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மட்டுமே காரணமல்ல.. ஏனெனில் நேற்று அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக வந்தன. வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.3% ஆக உயர்ந்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். இதனால் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா, பொருளாதார மந்தநிலைக்குள் சென்றுவிடுமோ என்ற பயம் உலக நாடுகளைத் தொற்றிக்கொண்டது. அமெரிக்கா தும்மினால் உலகிற்கே சளி பிடிக்கும் என்பார்கள், அதன் எதிரொலிதான் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகும்.
ஜப்பானின் 'கேரி டிரேட்' சிக்கல்
ஜப்பானின் 'கேரி டிரேட்' சிக்கலும் காரணம். முதலீட்டாளர்கள் ஜப்பானில் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்திருந்தார்கள். ஆனால், ஜப்பான் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால், அந்த முதலீடுகளை அவசரம் அவசரமாகத் திரும்பப் பெற வேண்டிய சூழல் அவர்களுக்கு உருவானது. இது உலக சந்தைகளில் பெரிய விற்பனை அழுத்தத்தை உண்டாக்கியது. இதுவும் பங்கு சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தது.
ஐடி பங்குகளின் வீழ்ச்சி
நமது இந்தியப் பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவைத்தான் அதிகம் சார்ந்து செயல்பட்டு வருவது அனைவருக்குமே தெரியும். அமெரிக்காவில் மந்தநிலை வந்தால், அங்கிருந்து கிடைக்கும் ஆர்டர்கள் குறையும் என்பதால், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம்
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூளும் சூழல் நிலவுவதால், கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே இப்போதும் நிலவுகிறது. போர் என்றாலே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தின் பக்கம் திரும்புவார்களே தவிர, பங்குச் சந்தையில் பணத்தை வைக்க மாட்டார்கள். எனவே அதுவும் பங்கு சந்தை சரிய காரணமாக இருந்தது.
லாபத்தைப் பிரித்தெடுத்தல்
கடந்த சில மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது. இப்படி ஒரு எதிர்மறையான செய்தி வந்ததும், "இனி சந்தை இறங்கும்" என்று பயந்து பலரும் தங்களது லாபத்தைப் பெறுவதற்காகப் பங்குகளை விற்கத் தொடங்கினார்கள்.
குறிப்பு: இந்த 10 லட்சம் கோடி இழப்பு என்பது 'காகித மதிப்பு' தான். பங்குகளை விற்காதவர்களுக்கு இது நிரந்தர இழப்பு அல்ல. சந்தை மீண்டும் மீண்டு வரும்போது இந்த மதிப்புத் திரும்பக் கிடைக்கும் என்பது தான் ஒரே சின்ன ஆறுதல்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications