Home Loan: OD அக்கவுண்ட் மூலம் உங்கள் வீட்டுக் கடனை விரைவில் அடைக்கலாம் - எப்படி? இதோ வழிமுறைகள்!
சென்னை: OD அக்கவுன்ட் மூலம் உங்கள் வீட்டுக் கடனை விரைவில் அடைத்துவிடலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என கூறி உதாரணங்களுடன் சில வழிமுறைகளை பொருளாதார நிபுணர் ராஜேஷ்மூர்த்தி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: OD அக்கவுண்ட் மூலம் உங்கள் வீட்டுக் கடனை விரைவில் அடைக்கலாம் - எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

OD ஹோம் லோன் என்றால் என்ன? உங்கள் வீட்டுக் கடனை விரைவாக அடைக்க ஒரு நல்ல வழி இருக்கிறது. அதற்கு பெயர் ஓவர்ட்ராஃப்ட் (OD) ஹோம் லோன். சாதாரணமாக நாம் அவசரத்துக்காக சில பணத்தை FD அல்லது சேமிப்பு கணக்கில் வைத்திருப்போம், இல்லையா? அந்தப் பணத்தை OD கணக்கில் போட்டால், அது உங்கள் வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்கும். அதே நேரத்தில் அவசரத்துக்கு அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளவும் முடியும்.
சாதாரண வீட்டுக் கடன் vs OD வீட்டுக் கடன்
சாதாரண வீட்டுக் கடனில்
அவசரப் பணம் FD-யில் இருந்தால் 3-5% வட்டி மட்டுமே கிடைக்கும்
அந்தப் பணத்தை கடன் அடைக்கப் பயன்படுத்தினால், திரும்ப எடுக்க முடியாது. முழு கடன் தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும். கடனை அடைக்க 25 வருடங்கள் ஆகலாம்.
OD வீட்டுக் கடனில்
உங்கள் அவசரப் பணம் 8% வட்டி சேமிப்பு தரும் (கடன் வட்டி குறைவதால்) எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். OD கணக்கில் உள்ள பணத்தைக் கழித்து மீதிக்கு மட்டும் வட்டி கடன் தானாகவே விரைவில் முடியும். உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
₹1 கோடி கடன், 7.5% வட்டி, 25 வருடங்கள்:
சாதாரண கடன்:
மொத்த EMI: 300 மாதங்கள்
மொத்தம் திருப்பிக் கொடுக்க வேண்டியது: ₹2.21 கோடி
OD கடன் (₹10 லட்சம் பாதுகாப்புப் பணம் வைத்தால்):
மொத்த EMI: 230 மாதங்கள் மட்டுமே
மொத்தம் திருப்பிக் கொடுக்க வேண்டியது: ₹1.95 கோடி
சேமிப்பு: ₹26.37 லட்சம்
வங்கிக் கட்டணங்கள்
OD கடனுக்கு வங்கிகள் 0-0.5% கூடுதல் வட்டி வசூலிக்கும்
நிர்வாகக் கட்டணம்: ₹3,000-5,000
எந்த வங்கிகளில் கிடைக்கும்?
OD வசதி உள்ளவை: SBI, BoI, BoB, ICICI, Axis, Federal, PNB, Indian Bank போன்றவை
OD வசதி இல்லாதவை: HDFC Bank, Canara Bank
தற்போது உள்ள வங்கியில் கிடைக்காவிட்டால், வேறு வங்கிக்கு மாற்றலாம். பெரும்பாலும் இதனை வங்கிகள் அனுமதிக்க தயங்குவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இதனால் வட்டி வருமானம் குறையும்.
கவனிக்க வேண்டியவை
அவசரப் பணம் மற்றும் சும்மா இருக்கும் பணத்தை மட்டும் பயன்படுத்துங்கள், முதலீட்டுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம்
அவசரப் பணத்தை வீணாக்க வேண்டாம். OD ஹோம் லோன் மூலம் உங்கள் வீட்டுக் கடனை 5-6 வருடங்கள் முன்னதாகவே அடைக்கலாம்.
லட்சக்கணக்கில் வட்டியைச் சேமிக்கலாம். அதே நேரத்தில் அவசரத்துக்குப் பணமும் கையில் இருக்கும். இது ஒரு அறிவார்ந்த நிதி முடிவு என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. இன்றே உங்களது வங்கியை தொடர்பு கொண்டு, இது பற்றி அறிந்து கொள்ளவும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications