சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனை நிலவி வந்த நிலையில் தற்போது திடீர் என்று மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எம்பி வைகோ தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனை நிலவி வந்த நிலையில் தற்போது திடீர் என்று மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் ராஜ்ய சபா எம்பி வைகோ தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர்களுக்கும் மதிமுக எம்பி வைகோவிற்கும் இடையில் சண்டை வந்தது. காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியது பெரிய சர்ச்சையானது.

வைகோ தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார். இதனால் வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் விமர்சனம் செய்தனர்.

நங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைதுநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது

என்ன சண்டை

என்ன சண்டை

காஷ்மீர் பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் பேசிய வைகோ, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிதான் பச்சை துரோகம் செய்தது. இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே காங்கிரஸ்தான் என்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் வரிசையாக வைகோவை திட்டினார்கள். வைகோவும் இதற்கு பதிலடி கொடுத்து வந்தார்.

என்ன தேர்தல்

என்ன தேர்தல்

இந்த பிரச்சனைக்கு முடிந்து சில நாட்கள் கழித்து, தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன.

திமுக எப்படி

திமுக எப்படி

இந்த நிலையில் எப்போதும் போல திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறுமா என்று கேள்வி எழுந்தது. காங்கிரஸ் உடன் சண்டை ஏற்பட்ட நிலையில், திமுக உடன் மதிமுக தொடர்ந்து தேர்தலில் நீடிக்குமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று மதிமுக தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல் எப்போது

இடைத்தேர்தல் எப்போது

இடைத்தேர்தலில் இரண்டு கட்சியின் வெற்றிக்காக மதிமுக பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்காக மதிமுக கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும். புதுச்சேரியில் நடக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நாம் வாக்கு சேகரிக்க வேண்டும்.

சப்போர்ட்

சப்போர்ட்

நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். இதனால் வைகோ மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வந்த பிரச்சனை சரியாகி உள்ளது. இரண்டு கட்சிகளும் கசப்பை மறந்துள்ளது புலனாகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆனால் வைகோவின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு திமுகவும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். திமுகவின் சமாதான பேச்சும், கூட்டணி நீடிக்க ஒரு காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.

English summary
Vaiko forgets the fight, Joins hands with Congress again for by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X