சித்திரை திருநாள் வாழ்த்து கூறிய வைரமுத்து... நாட்படு தேறல் ரோஜாவே தமிழ் பேசு ட்ரைலர் ரிலீஸ்
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஏப்ரல் 17 ஒளிபரப்பாகும் முதல் பாடல் வரிகளைக் கேளுங்கள் என்று வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். ஏப்ரல் 17 ஒளிபரப்பாகும் முதல் பாடல் வரிகளைக் கேளுங்கள் என்று வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

நாட்படு தேறல் என்ற தலைப்பில் வைரமுத்து 100 பாடல்களை உருவாக்கியுள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு பாடல் வீதம் நாட்படு தேறலின் முதல் பாகம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது.
நாட்படு தேறல் 2 பாட்டுத் தொடரின் முதல் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோஜாவே தமிழ் பேசு என்று எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. இன்றைய தினம் தனது முதல் பாடலின் வரிகளை கூறி டிரைலரை வெளியிட்டுள்ளார்.
சித்திரைத் திருநாள்
— வைரமுத்து (@Vairamuthu) April 14, 2022
வாழ்த்துக்கள்
ஏப்ரல் 17 ஒளிபரப்பாகும்
முதல் பாடல்
வரிகளைக் கேளுங்கள்
--#Naatpadu_Theral_Season2 | #நாட்படு_தேறல்2@kalaignartv_off | #isaiaruvi |@Bombay_Jayashri | @Ramesharchi | @iamAksharaReddy pic.twitter.com/jdE8aaVGW8
ரோஜாவே தமிழ் பேசு
செடியில் பூத்த நட்சத்திரமே
சிரிப்பில் எழுதிய சித்திரமே
சின்னஞ்சிறு காலம்தான்
நீ வாழ்வது - ஆனால்
காற்றில் ஒரு பெருவாழ்வு
நீயெழுதிப்போவது
எங்ஙனம் உன்னால் ஆனது
வான் கொடுத்தாலும் விண்மீண் போதும்
மண் கொடுத்தாலும்
மலரொன்று போதும்
கடல் கொடுத்தாலும்
ஒரு விண் மீன் போதும்
பெரியது எல்லாம்
பெரும் பொருள் இல்லை
சிறியது எல்லாம்
சிறு பொருள் இல்லை
பயன்களைப் பொறுத்தே
பொருட்களின் எல்லை
வெயிலுக்குத் தன்னை
விருந்து வைத்தாலும்
முயலுக்கு தாகம்
தீர்த்து வைத்தாலும்
பனித்துளி வாழ்வு
பூரணமாகும்
தொடங்கிய வாழ்வை
அழகு செய்தாலும்
அடங்கிய வாழ்வை
அமைதி செய்தாலும்
மலர்களின் வாழ்வு
பூரணமாகும்
என்று பாடினார் கவிஞர் வைரமுத்து. ரோஜா தோட்டங்களில் பனி பொழியும் வனத்தில் ரோஜா நிற ஆடை அணிந்து ரோஜாவை தமிழ் பேச சொல்லி பாடுகிறார் கதாநாயகி. இந்த பாடலை இசையடைத்து இயக்கியிருப்பவர் ரமேஷ் தமிழ் மணி குரல்: பாம்பே ஜெயஸ்ரீ. வைரமுத்து எழுதியுள்ள நாட்படு தேறல் 2 வரும் 17ஆம் தேதி ஞாயிறன்று ஒளிபரப்பாக உள்ளது. வைரமுத்து யுடுயூப் சேனலில் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும். இசையருவியில் 1.30 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என வைரமுத்து கூறியுள்ளார்.
-
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications