சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஷத்தை போல வீரியம் உள்ளது.. அமுதம் போல காரியம் செய்வது.. நாட்படு தேறல் - வைரமுத்து ட்வீட்

கவிஞர் வைரமுத்துவின் 100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறலின் தலைப்புப்பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கவிஞர் வைரமுத்து தனது 100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறலின் தலைப்புப்பாடலை இன்று வெளியிட்டுள்ளார்.
விஷத்தை போல வீரியம் உள்ளது அமுதம் போல காரியம் செய்வது நாட்படு தேறல். உலகில் வீழும் ஒவ்வொரு துளியும் ஊட்டி வளர்த்த தாய்முளைப்பாலும் நாட்படு தேறல் என்று அழகாய் படம்பிடிக்கப்பட்டுள்ளது நாட்படு தேறல் தலைப்புப்பாடல்.

தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை என வைரமுத்து கூறியிருந்தார். மேலும் தாம் பெரிதும் மதிக்கும் கலைஞர்களில் என் கைக்கெட்டியவர்களோடு கைகோத்தேன். 100 பாடல்கள் - 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கிறேன்.

Vairamuthu tweets about 100 songs project Natpadu theral heading song

இந்த நூறு பாடல்களுக்கு 'நாட்படு தேறல்' என்று பெயர் வைத்திருக்கிறேன் எனவும் அறிவித்திருந்தார். இந்த 100 பாடல்கள் தொகுப்பின் முன்னோட்டங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து வெளியிட்டு வருகிறார். இன்று நாட்படு தேறல் தலைப்பு பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாட்படு தேறல்... நாட்படு தேறல் பூமிக்குள்ளே புதைத்த தேனே சாமி என்னும் கருத்தும் கூட என்று தொடங்குகிறது அந்த பாடல்.

விஷத்தை போல வீரியம் உள்ளது அமுதம் போல காரியம் செய்வது நாட்படு தேறல். உலகில் வீழும் ஒவ்வொரு துளியும் ஊட்டி வளர்த்த தாய்முளைப்பாலும் நாட்படு தேறல். இதிகாசத்தில் வீழ்ந்த ரத்தம் நாட்படு தேறல்... இலக்கியத்தில் வழிந்த கண்ணீர் நாட்படு தேறல் என்று இயற்கையோடு இணைந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

English summary
The title track of the 100-song collection of poet Vairamuthu, Nadpadu Theral, has been released today. Poet Vairamuthu has posted this on his Twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X