சென்னையில் இருந்து ’ஸ்பெஷல்’ வந்தே பாரத் ரயில்? 3 மாநிலங்கள் வழியாக ஓடும்.. எந்த ரூட்டில் தெரியுமா?
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் எர்ணாகுளம் என மொத்தம் மூன்று மாநிலங்களில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலை இயக்கும் திட்டம் ரயில்வே தரப்பிடம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2019 - ஆம் ஆண்டு முதன் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பல்வேறு சொகுசு வசதிகளை கொண்ட ரயிலாக இருந்தது. இதனால், பயணிகளுக்கும் இந்த ரயில் மீதான ஆர்வம் அதிகரித்தது. தற்போது வரை 33 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் என மொத்தம் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், பயோ டாய்லட்டுகள் என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சென்னை, கொச்சி, பெங்களூர்: வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ள நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் என மொத்தம் மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம். கேரளாவில் ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் ஓடும் நிலையில், மூன்றாவது வந்தே பாரத் ரயில விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் சென்னை, கொச்சி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் புறப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. வார இறுதியில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருக்கும் என்பதால் அதற்கேற்றவாறு இந்த ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இரண்டு சேவைகள்: தென் மேற்கு ரயில்வேயிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு இந்த ரயிலானது இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எர்ணாகுளம் - பெங்களூர் ரூட்டில் ஓடும் வகையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். சென்னை - பெங்களூர் ரூட்டில் இரண்டு சேவைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதாவது, சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்படும் இந்த ரயில் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்து சேரும். பெங்களூரில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் எர்ணாகுளத்திற்கு பிற்பகல் 1.30 மணிக்கு வந்து சேரும். பின்னர் இரண்டு மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு ரயில் கிளம்பும்.
8 பெட்டிகள்: பெங்களூருக்கு இரவு 10.30 மணிக்கு வந்து சேரும். சனிக்கிழமை அதிகாலை பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு கிளம்பும். எர்ணாகுளத்திற்கு நண்பகல் சென்றடையும் இந்த ரயில், பெங்களூருக்கு கிளம்பும். பின்னர் அங்கிருந்து 11.30 மணிக்கு சென்னைக்கு புறப்படும் வகையில் இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலை தூரங்களுக்கு தயாராகும் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலாக இது அறிமுகம் ஆகும் எனத் தெரிகிறது.
8 பெட்டிகளை கொண்டதாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அளித்துள்ள இந்த பரிந்துரையை தென்மேற்கு ரயில்வே பரிசீலித்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், இந்த ரயில் சேவை எப்போது துவங்கும் கட்டணம் எப்படி இருக்கும், ரயிலின் வசதிகள் என்ன போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications