வஞ்சிரம் கிலோ எவ்வளவு? ஆடி மாதம் வந்தும் சென்னை காசிமேட்டில் மீன் விலை குறையாதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதமான ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை தொடர்ந்து எகிறியபடியே உள்ளது.. சந்தைக்கு வரும் மிகக்குறைந்த அளவு மீன்களின் விலையும் குறையவேயில்லை.. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உள்ளூர் மக்களுக்கு காசிமேடு துறைமுகத்திலேயே மீன்கள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக உள்ளூர் வியாபாரிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது சென்னை காசிமேட்டில்?

பொதுவாக அம்மன் மற்றும் முருகனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.. இதன்காரணமாக, அசைவப் பிரியர்களில் பெரும்பாலானோர் இந்த மாதத்தில் இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கமாகும்.. இதனால் எப்போதுமே ஆடி மாதத்தில் மீன்களின் தேவை குறைந்து, விலையும் கணிசமாக வீழ்ச்சியடையும்.

Fish Prices

ஆனால் இந்த ஆண்டு, ஆடி மாதம் பிறந்தும் மீன் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது, சென்னை அசைவப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது..

கடந்த மூன்று வாரங்களாகவே காசிமேடு துறைமுகத்தில் ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் நிலை நீடித்து வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் மீன்கள் வரத்து அதிகரித்து விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆடி மாதம் துவங்கியும் மீன் விலை குறையல

அதனால் ஆயிரக்கணக்கான மீன் பிரியர்கள், விடிகாலையிலேயே காசிமேடு துறைமுகத்தில் குவிய துவங்கினார்கள்.. நூற்றுக்கணக்கான படகுகள் வந்தபோதிலும் உள்ளூர் சந்தையில் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.. இதனால் விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.. மீன்விலை வழக்கம்போல் அதிகமாகவே விற்கப்பட்டுள்ளது..

கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஒட்டுமொத்த மீன் வரத்து முடங்கியுள்ளதால், காசிமேடு வளாகத்தில் சில்லறை விற்பனை கடைகளின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கடலிலிருந்து கொண்டு வரப்படும் தரமான மற்றும் பெரிய அளவிலான மீன்களை வாங்குவதற்கு மட்டுமே, உள்ளூர் உணவக உரிமையாளர்களும், ஏற்றுமதி நிறுவனத்தினரும் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர்.

சென்னை காசிமேடு மீன் துறைமுகம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த மீன் வரத்து குறைவாக இருக்கும் அதேசமயம், துறைமுகத்திற்கு வரும் பெரிய வகை மீன்கள் அனைத்துமே அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பெரிய மீன்களைக் கொள்முதல் செய்வதால், உள்ளூர் மக்களுக்கு தேவையான மீன்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறதாம்.

இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் மிகக்குறைந்த அளவு மீன்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விடுகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உள்ளூர் மக்களுக்கு காசிமேடு துறைமுகத்திலேயே மீன்கள் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படாலாம் என்று உள்ளூர் வியாபாரிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காசிமேட்டு மார்க்கெட்

நேற்றைய தினம் பெரிய வகை மீன்களின் விலையை கேட்டு ஆடிப்போன மீன்பிரியர்கள், வேறு வழியின்றி சிறிய வகை மீன்களை வாங்கி சென்றுள்ளார்கள்.. குறிப்பாக வஞ்சிரம், கொடுவா போன்ற பெரிய மீன்களின் விலை மிக அதிகமாக இருந்ததால், அவைகளை வாங்காமல், சிறிய வகை மீன்களையே வாங்குவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு மீன் கொண்டு செல்லும் வியாபாரிகளும் கூடை கூடையாகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சிறிய வகை மீன்களையே வாங்கி சென்றதைக் காண முடிந்தது.

வஞ்சிரம், ஐ வவ்வால், கொடுவா

வஞ்சிரம், எப்போதுமே அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 1,100 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை விற்பனையானது. மீன் வகைகளிலேயே மிக அதிக விலையாக ஐ வவ்வால் மீன் கிலோ 1,900 ரூபாய்க்கும், வெள்ளை வவ்வால் 1,400 ரூபாய்க்கும், கறுப்பு வவ்வால் 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கொடுவா மீன் கிலோ 900 ரூபாய்க்கும், தேங்காய் பாறை, ஷீலா மற்றும் பால் சுறா ஆகிய மீன் வகைகள் தலா 600 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. பாறை மீன் கிலோ 400 முதல் 700 ரூபாய்க்கும், கடல் விரால் 600 ரூபாய்க்கும், இறால் 400 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

மீன் பிரியர்களால் அதிகம் வாங்கப்படும் சங்கரா மீன் 400 முதல் 500 ரூபாய்க்கும், கடம்பா 400 ரூபாய்க்கும், நண்டு, நவரை, பண்ணா, கடுமா மீன் வகைகள் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், ஏழை எளிய மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நெத்திலி மீன் கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாத ஆரம்பத்திலேயே மீன் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது சென்னை அசைவ பிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறதாம்....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+