Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணவக் கொலையை தடுக்க சட்டம்.. முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் அளித்தார்? திருமாவளவன் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்ற கோரி முதல்வர் ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். சென்னையில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கின்றனர்.

நெல்லை கவின் ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகியது. இதனால் ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அத்தனைக் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. அதேபோல் பாதிக்கப்பட்ட கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறி இருந்தார்.

VCK CPIM and CPM Party Leaders Urge CM Stalin to Enact Law Against Honour Killings

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், சிபிஎம் பெ.சண்முகம் மற்றும் சிபிஐ முத்தரசன் ஆகிய மூவரும் சந்திப்பு நடத்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று 3 கூட்டணிக் கட்சிகளும் இணைந்து முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எவ வேலு, கேஎன் நேரு ஆகியோர் உடனிருந்தனர். கடந்த வாரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சந்தித்திருந்தனர்.

அதற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். கடந்த 2 வாரங்களில் மட்டும் 6 கட்சிகளின் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கும், ஆணவக் கொலை தனிச் சட்டம் கொண்டு வருவதற்கான கோரிக்கை மனு என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும், பின்னணியில் வேறு காரணம் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணியை வலிமையாகக் கட்டமைத்து வருகிறது. முதலில் சொந்தக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் ஸ்டாலின், அடுத்ததாகக் கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்ய சந்திப்பு நடத்தி வருவதாகப் பார்க்கப்படுகிறது. இதன்பின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க திமுக திட்டமிட்டு வருகிறது.

இதன் மூலமாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகத் தெளிவாக தேர்தலை அணுகி வருவதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சந்திப்புக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆணவக் கொலையைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் தேவை என்பதைக் கடந்த சில ஆண்டுகளான வெவ்வேறு அமைப்புகள், ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. அவற்றையெல்லாம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய போது, அளித்த கோரிக்கை மனுவில் கோடிட்டுக் காட்டி இருக்கிறோம். ஆணவக் கொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை என்பதைச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

அதேபோல் ஆணவக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் தீர்ப்பாக வழங்கி இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் இணைத் தேர்வு சுதந்திரத்தில் கெளரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். இவையனைத்தையும் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கி இருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆணவக் கொலை சட்டம் தொடர்பாகப் பேசுவார்களா என்று தெரியாது. கவின் ஆணவக் கொலை வழக்கில் தமிழக அரசு சரியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஆணவக் கொலை சட்டம் வருவதால், இடைநிலை சாதி மக்கள் ஒன்றும் மனம் மாறிவிட மாட்டார்கள். மக்களுடன் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+