ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடையா.. நாங்க ப்ரீயா தரோம்-.. விசிக, மமக ஆவேசம்
சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி தராவிட்டால் விழா வளாகத்தில் இலவசமாக பீப் பிரியாணியை தருவோம் என எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.
திருப்பூத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆம்பூர் பிரியாணி திருவிழா நாளை முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடக்கிறது.
இதற்காக 30 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 வகையான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பிரியாணி பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பிரியாணி
ஒரே இடத்தில் அத்தனை வகையான பிரியாணிகளை சுவைக்கவுள்ளதால் தற்போதே வார இறுதியை ஆம்பூரில் கொண்டாட கிளம்பிவிட்டார்கள். இந்த நிலையில் இங்கு பீப் பிரியாணிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமமுகவின் செய்தி பிரிவு செயலாளர் ஆம்பூர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

ஆம்பூர் பிரியாணி
அதில் இறையன்பு அவர்களே... தங்கள் அதிகார வரம்பில் வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆம்பூர் பிரியாணி திருவிழா நடத்த முற்பட்டது வரவேற்கத்தக்க விஷயம்... ஆனால் தனிப்பட்ட தனக்கு பீஃப் பிடிக்காது என்ற காரணத்திற்காக அந்த திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுத்து வருகிறார். ஆம்பூரில் 80 சதவீத பிரியாணி கடைகள் பீஃப் பிரியாணி கடைகளே. அதே போல் இங்கு சாதி மதம் தாண்டி 90% பொதுமக்கள் பீப் பிரியர்களாகவே உள்ளனர். தமிழகம் சமூக நீதி பூமி என்பதனை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து கொண்டு வரும் சூழலில் பிரியாணி திருவிழாவில் பீப் தடை என்பது சமூக நீதியை கேள்வி கேட்பதாக உள்ளது.

பீப்பிற்கு தனி அரங்கம்
தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து சமூக மக்களையும் மதிக்கும் வகையில் பீஃபிற்கு தனி அரங்கம் அமைத்து, சைவ பிரியர்களுக்கும் தனி அரங்கம் அமைத்து பிரியாணி திருவிழா அமோகமாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே நாட்டில் பீப்பிற்கு எதிராக தடைகள் உள்ள நிலையில் உணவு திருவிழாவில் இப்படி ஒரு தடையா என மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Recommended Video

இலவச பீப் பிரியாணி
இந்த நிலையில் எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தன. அப்போது கட்சியின் பிரதிநிதிகள் கூறுகையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி தராவிட்டால் திருவிழா நடைபெறும் வளாகத்தில் இலவசமாக பீப் பிரியாணியை தருவோம் என தெரிவித்துள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications