சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கைகளால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்! எச்சரிக்கும் திருமாவளவன்!

Google Oneindia Tamil News

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.யின் நடவடிக்கைகள், அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் போட்டித் தேர்வர்களை அதிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளர்.

மேலும், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறும் அவர் குரூப் 4 தேர்வை 2023ஆம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான திருமாவளவனின் பதிவு வருமாறு;

என்ஐஏ அதிகாரி! உங்க வீட்டை சோதனை செய்யணும்! ரூ20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி! சிக்கியது எப்படி? என்ஐஏ அதிகாரி! உங்க வீட்டை சோதனை செய்யணும்! ரூ20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி! சிக்கியது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டுள்ளது . அந்த ஆண்டுதிட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன. மேலும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் GR-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

வேலையில்லாதோர் எண்ணிக்கை

வேலையில்லாதோர் எண்ணிக்கை

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வினை எழுத தயாரான சூழலில், சமீபத்தில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டுத்திட்டம் போட்டித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். இதன் காரணமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

குழப்பநிலை

குழப்பநிலை

தேர்வு முறைகளில் தேர்வாணையம் கொண்டு வரும் சீர்திருத்தங்களை வரவேற்கும் அதே வேளையில், தொடர்ந்து தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கேள்விகள் முறையில் உருவாக்கிவரும் மாற்றம் தேர்வர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக ஓர் அயர்ச்சியையும், போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் ஒரு குழப்பநிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

எனவே, தேர்வாணையம் போட்டித்தேர்வர்களின் மேற்கண்ட சிக்கல்களை கவனத்தில்கொண்டு நிலையான பாடத்திட்டம் மற்றும் கேள்விகேட்கும் முறை ஆகியவற்றைச் சரியாக கையாள வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.

10402 காலிப்பணியிடங்கள்

10402 காலிப்பணியிடங்கள்

மேலும், ஆளுநர் உரையில் அரசுப்பணிகளில் 10402 பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தெரியவருகிறது. ஏற்கனேவே நிரப்பப்படாத பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களுக்கான அறிவிப்பும் இந்த ஆண்டுத்திட்டதில் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ரூ.50000 நிதி

ரூ.50000 நிதி

அத்துடன் UPSC மற்றும் TNPSC Gr(I) முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50000 நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே, தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமெனவும், GR-(I),(II) & (IV) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

English summary
Thirumavalavan has warned that the actions of TNPSC will lead competitive aspirants preparing for government exams to deviate from it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X