நாங்களும் மேயர் சீட் கேட்டோம் ஆனால்.. புள்ளி வைத்து பேசிய திருமாவளவன்.. என்ன சொன்னது திமுக ?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒதுக்க வேண்டுமென திமுகவுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், கவனத்தில் கொண்டு தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவிடம் காங்கிரஸ் கட்சி மேயர் சீட்டு கேட்டு வரும் நிலையில், நேற்று விசிக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் விசிக மேயர் சீட்டு கேட்கவில்லை எனவும், போதுமான சீட்டுகளை ஒதுக்க வேண்டுமென பொதுவாக கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விசிக பேச்சுவார்த்தை
தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கட்டமைப்பு உள்ள நிலையில் கணிசமான இடங்களில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது இதற்காக திமுக மாவட்ட செயலாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு குறிப்பிட்ட வார்டுகளை ஒதுக்கித் தருமாறு பட்டியல் கொடுத்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவர்களில் எந்தெந்த வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடுக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மேயர் பதவி
திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது என கூறப்பட்டுள்ள நிலையில், துணைமேயர் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் மேயர், துணை மேயர், தலைவர் துணைத்தலைவர் பதவிகளிலும் தீபிகாவுக்கு போதிய அளவில் இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் எனவும், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலுக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவனத்தில் கொண்டு தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பதில்
குறிப்பிட்டு நாங்கள் எந்த தலைவர் பதவியையும் மேயர் பதவியையும் பற்றி பேசவில்லை என திருமாவளவன் கூறியதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால் மேயர் துணை மேயர் தலைவர் துணைத் தலைவர் பதவிகளும் விசிகவுக்கு என புள்ளி வைத்து ட்விட்டரில் திருமாவளவன் கருத்து பதிவிட்டு இருப்பது தான் தற்போதைய பரபரபுக்கு காரணமாக உள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கவனத்தில் வைத்துக் கொள்கிறேன் என திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு முடிவு..
சூழ்நிலை தற்போதைய சூழலில் தேர்தல் முடிந்து கூட்டணி சார்பில் போதிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றால்தான் பதவியை பெற போட்டியில் இறங்க முடியும் என்ற உள்ள நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு கலைஞரின் ஆட்சிக்காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கடலூர் நகராட்சி துணைத்தலைவர் பதவி, நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி, பாப்பிரெட்டிபட்டி செந்துறை ஆகியவைகளை ஒன்றிய பெருந்தலைவர் பதவி வழங்கியதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குறிப்பிட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என திமுக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications