மத்திய அரசு முடக்கிய பிரதமர் மோடி ஆவணப்படம்- தமிழில் இன்று சென்னையில் வெளியிடும் திருமாவளவன் எம்பி!
மத்திய அரசு தடை செய்த பிரதமர் மோடி ஆவணப்படத்தை இன்று சென்னையில் வெளியிடுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
சென்னை: மத்திய அரசு முடக்கிய பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை தமிழில் இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட உள்ளார்.
2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவி வகித்தார். அப்போது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் சாதுக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மத மோதல்கள் வெடித்தன. இதில் சுமார் 1,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகை உலுக்கிய மிக மோசமான மதப்படுகொலைகளில் ஒன்றாக குஜராத் இனப்படுகொலைகள் கருதப்படுகிறது. இது தொடர்பாக குஜராத் முதல்வராக இருந்த மோடி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்குகளில் இருந்து மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குஜராத் கலவரங்கள், பிரதமர் மோடியை மையப்படுத்தி பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே பிபிசி ஆவணப்படத்தை பாஜகவுக்கு எதிரான கட்சிகள் நாடு முழுவதும் திரையிட்டு வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.
தமிழ்நாட்டிலும் பல இடங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்ப்ட்டது. தற்போது பிபிசி ஆவணப்படத்தை திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழில் மொழிபெயர்த்துள்ளது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பிபிசி ஆவணப்படம் இன்று மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.

சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications