சசிகலாவின் கார் விபத்தில் சிக்கியது... அதிர்ச்சியளிக்கும் வீடியோ.. தொடர்ந்து முன்னேறி வரும் பயணம்..!
சசிகலாவின் கார் சிறு விபத்தில் சிக்கியது
சென்னை: சசிகலா வந்த கார் திடீரென விபத்து ஒன்றில் சிக்கி கொண்டது.. தொண்டர்கள் ஆர்வ கோளாறினால் இப்படி சிறு விபத்துக்கள் வழியில் ஏற்பட்டாலும், தொடர்ந்து முன்னேறி வருகிறது சசிகலாவின் கார்..!
இன்று காலையில் இருந்தே தமிழகம் ஒருவித பரபரப்பில் உள்ளது.. அமமுக குஷியில் உள்ளனர்.. அதிமுக டென்ஷனில் உள்ளது.. திமுக நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது..!

அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு எந்தவித ஆதாயமும் கிடைத்து விடகூடாது என்ற நோக்கில் ஜெயலலிதாவின் நினைவிடம், வேதா இல்லம், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகம் போன்றவைகளை எல்லாம் பூட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video

இதனிடையே சென்னையை நோக்கி சசிகலா வந்து கொண்டிருக்கும்போதே 2 கார் மாற்றியாகிவிட்டது.. சசிகலாவை வரவேற்க ஏகப்பட்ட வாகனங்கள் அணிதிரண்டு உள்ளன.. அப்போது ஓசூர் அருகே சசிகலாவின் கார், ஒரு சிறிய விபத்துக்கு உள்ளானது.
அது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பை கூட்டி உள்ளது.. ரோட்டில் இரு பக்கமும் கார்கள் சூழ சசிகலாவின் காரும் வந்து கொண்டிருக்கிறது.. அப்போது ஆர்வ கோளாறினால், பின்னால் உள்ள வாகனம் ஒன்று ஓவர்டேக் செய்து முன்னாடி வர முயல்கிறது.. அப்போது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இன்னொரு கார் மீது லேசாக மோதிவிட்டது.. பிறகு மோதிய வேகத்தில் மற்றொரு பக்கம் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரிலும் லேசாக உரசிவிட்டது.
இந்த விபத்தினால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.. அதனால், சசிகலாவின் பயணம் தொடர்ந்து முன்னேறி சென்னை நோக்கி வருகிறது.. அவர் எப்போது சென்னை வருவார்? எப்போது தொண்டர்களிடம் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இன்னொரு பக்கம் இந்த சிறு விபத்து வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications