அதிமுக, திமுகவை வைத்து செய்த நாம் தமிழர் கட்சி.. தீபலட்சுமியின் எழுச்சியால் எதிர்பார்க்காத மாற்றம்!
வேலூரில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி மிக முக்கியமான சவாலாக இருந்துள்ளது.
Recommended Video
சென்னை: வேலூரில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி மிக முக்கியமான சவாலாக இருந்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டு முக்கிய கட்சிகளின் வெற்றியையும் நாம் தமிழர்தான் தீர்மானிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிரடி திருப்பமாக தற்போது திமுக முன்னிலை வகித்து வருகிறது. வேலூர் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 381316 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
இவ்வளவு நேரம் முன்னிலை வகித்த அதிமுக இப்போது பின்னுக்கு சென்றுள்ளது. அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 366842 வாக்குகள் பெற்று உள்ளார்.

அதிமுக முதலில்
இதில் முதலில் அதிமுகதான் முன்னிலை வகித்து வந்தது. 6 வது சுற்று வரை அதிமுகதான் இதில் முன்னிலை வகித்து வந்தது. அதிலும் அதிமுக அப்போது 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தது. அதிமுகதான் வெல்லும் என்று நினைத்துக் கொண்டு இருந்தனர்.

நாம் தமிழர்
அப்போது நாம் தமிழர் கட்சி 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தது. இதனால் அதிமுக வெற்றியை நோக்கி நகர்ந்து சென்றது. ஆனால், போக போக அதிமுகவிற்கு வாக்குகள் வருவது குறைந்தது. மாறாக நாம் தமிழர் கட்சி 6ம் மற்றும் 7 வது சுற்றில் வேகம் எடுக்க தொடங்கியது.

பிரித்தது
அதேபோல் திமுகவும் அதன்பின்தான் வேகம் பெற்றது. நாம் தமிழர் 6 மற்றும் 7வது சுற்றில் மட்டும் 5 ஆயிரம் வாக்குகளை பெற்றது. அடுத்த சுற்றில் 6 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இப்படி வரிசையாக நாம் தமிழர் வேகமாக வாக்குகளை பெற்றது.

எப்படி இருந்தது
ஆனால் அதிமுகவால் முன்புபோல வாக்குகளை பெற முடியவில்லை. இதனால் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவை சந்தித்து வந்தது. தற்போது நாம் தமிழர் கட்சி 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. வெறும் மூன்று சுற்றில் நாம் தமிழர் 5 ஆயிரம் வாக்குகளில் இருந்து 20 ஆயிரம் வாக்குகளுக்கு உயர்ந்துள்ளது .

இடையில்
தற்போது அதிமுக திமுக இடையில் நிலவும் வேறுபாடு 15 ஆயிரம் வாக்குகள்தான். இதன் மூலம் நாம் தமிழர்தான் இவர்களின் வாக்குகளை பிரித்து இருக்கிறது. இரண்டு கட்சிக்கும் இடையில் வேறுபாடாக நாம் தமிழர் திகழ்ந்து இருப்பது புரிய வருகிறது. நாம் தமிழரின் தீபலட்சுமி பெற்ற 20 ஆயிரம் வாக்குகள்தான் இந்த தேர்தலில் டிசைடராக இருந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications