தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்! கட்டுப்படுத்த -கண்காணிக்க தனித்துறை தேவை! -வேல்முருகன்
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்துறை தேவை எனவும் வேல்முருகன் வலியுறுத்திள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள வடமாநிலத்தவர்களை, மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

வடமாநிலக் கொள்ளையர்கள்
தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கம்பி மற்றும் சிமெண்டு மொத்த வியாபார கடை நடத்தி வந்துள்ளனர்.

பேரதிர்ச்சி
இந்த கடையில், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த இருவர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சந்தோஷிடம் இருந்த 4 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற அந்த வடமாநிலத்தவர்கள், அவரை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துள்ளனர். இத்தகைய நிகழ்வு பேரதிர்ச்சி அளிக்கிறது.

வட மாநிலத்தினர்
சமீபத்தில், கடந்த 06.04.2022 - ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022 - பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர்.

மிகை எண்ணிக்கையில்
இவ்வாறு, மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள வடமாநிலத்தினர் தமிழ்நாட்டில் இதுபோல் தாக்குதல்களில் ஈடுபடுவதும், கொலை - கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் பெட்டிகளில் முறையான பயணசீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்யும் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு பெட்டிகள்
கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அசாம் மாநிலத்திற்கு செல்லும் பெங்களூரு விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், ரயில்வே காவல்துறைக்கு புகார் தெரிவித்ததையடுத்து திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டு, 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அடிப்படை ஒழுக்கம்
அடிப்படை ஒழுக்கமோ மனித அறமோ நேயமோ இல்லாத இப்படிப்பட்ட வடவர்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஆரியத்துவ சங்கிகளை தமிழ்நாட்டில் நிலைப்படுத்தவே இவர்கள் திட்டமிட்டு களமிறக்கப்படுகிறார்கள். இவர்களுக்காகவே ஒரே நாடு - ஒரே ரேசன் திட்டம் தயாராகிறது.

உள் அனுமதிச் சீட்டு
எனவே, தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், இந்த அநீதியைத் தடுக்க, தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டை வழங்கக் கூடாது. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல் வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய உள் அனுமதிச் சீட்டு முறை கொண்டு வர வேண்டும்.

சட்டமன்ற கூட்டத்தொடரில்
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், தனித்துறை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனை கருத்தில் கொண்டு, எதிர் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், இதற்கான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. தனித்துறையை உருவாக்கும் வரை, தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள வடமாநிலத்தவர்களை, மாவட்ட வாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள, வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டைகளை திரும்ப பெற வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications