சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறப்பு கல்வி பயிற்றுநர்கள் கொத்தடிமைகளா.. நிரந்தரமாக்குங்கள் உடனே.. வேல்முருகன் காட்டம்

சிறப்பு கல்வி பயிற்றுநர்களை நிரந்தரமாக்க வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "மாதம் முழுவதும் வேலைபார்த்தும், மணிக்கணக்கு கட்டணமாக ஊதியம் வழங்கப்படும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி பயிற்றுநர்கள் கொத்தடிமைகளா என்ன?
அவர்களின் நீண்ட பணிக் காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களை நிரந்தரமாக்கி, சட்டப்படியான ஊதியமும் வழங்க வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை இதுதான்:

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் கல்வி கற்பிக்கும் சிறப்புப் பயிற்றுநர்கள் 1761 பேர் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் 435 பேர் என மொத்தம் 2196 பேர் உள்ளனர்.
இவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் உள்ளடங்கிய கல்விக் கூறில், மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றிய வள மையங்களிலும் 5 பணியாளர்கள் வீதம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான பணி வரன்முறையின்றிப் பணியாற்றி வருகிறார்கள்.

Velmurugan urges TN govt to make special tutors permanent

1998ஆம் ஆண்டு முதல் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தில் 7 மாவட்டங்களில் தொடங்கி, 2002ஆம் ஆண்டு முதல் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' வழியாக தொண்டு நிறுவனங்கள் மூலம் பணி செய்து வந்து, பின்னர் 2012ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்திவைத்து, நேரடியாக அனைத்துப் பணியாளர்களையும் அரசு உட்கவர்ந்து கொண்டது.

ஆனால் எவ்வித பணி நியமன ஆணையும் வழங்கப்படவில்லை. அதன்பின் வட்டார வள மையங்களில் நேரடியாக முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஊதியம் பெற்று வந்தவர்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல் ஒரு பள்ளியில் இணைத்து பள்ளியில் செயல்படும் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்த பள்ளி மேலாண்மைக் குழுவில் இணைக்கப்பட்டது. தற்போது 2018ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி மூலம் மத்திய மாநில நிதிப் பங்கீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்கள்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் பாகுபாடு இல்லாத கல்வி கற்பிப்பது அரசின் கடமை ஆகும். இதில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி அளிப்பதும் கட்டாய உரிமை ஆகும். அந்த வகையில் அவர்களுக்கான பிரத்யேக கல்வி பயின்ற ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறையில் பணிநிரந்தரம் செய்வது அரசின் கடமையாகும்.

"கமிஷன் அடிப்பதில்தான் கவனம்.. மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்".. உதயநிதி ஸ்டாலின் காட்டம்

இது போன்ற ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் இதர ஆசிரியர்களைக் காட்டிலும் அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கூட மறுக்கப்படுவதுதான் வேதனை!
இந்தச் சிறப்புப் பயிற்றுநர்கள், பள்ளிகளில் படிக்கும் மனவளர்ச்சிக் குறை, ஆட்டிசம், டௌன்சிண்ட்ரோம், குறைப்பார்வை, முழுப்பார்வையிழப்பு, காதுகேளாமை, வாய்பேசாமை, உடலியக்கக் குறைபாடு, கற்றல் குறைபாடு, பல்வகை ஊனம் ஆகிய 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் சிறப்புக் கல்விப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இப்படியாக ஊதியத்தைப் பொருட்படுத்தாது சேவை மனப்பான்மையுடன் பணிபுரிந்து வரும் இச்சிறப்புப் பயிற்றுநர்களுக்கு அரசின் வழியாக தற்காலிக பணி நியமன ஆணை மற்றும் தற்காலிக அல்லது தொகுப்பூதியப் பணியாளர்களுக்குரிய விடுப்புகள், மகப்பேறு விடுப்பு, இபிஎஃப் என எந்தச் சலுகையும் மறுக்கப்படுகிறது.
மாதம் முழுதும் வேலைபார்த்தும், கூலித் தொழிலாளர்களைவிட மோசமாக மணிக்கணக்குப் பார்த்து கட்டணம் வழங்கி, அதை பெயரில் ஊதியம் என்று சொன்னால், இது அவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதன்றி வேறென்ன?

எனவே 20 ஆண்டுகளுக்கும் மேலான அவர்களின் பணிச் சேவையைக் கருத்திற்கொண்டு சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்வது மட்டுமின்றி, சட்டப்படியான ஊதியமும் அவர்களுக்கு வழங்கக் கோரி வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Velmurugan urges TN govt to make special tutors permanent
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X