Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்! ரசிகர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 700+ படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாகக் காலமானார். 83 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். வயது மூப்பு காரணமாகச் சிகிச்சையும் பெற்று வந்தார். இதற்கிடையே அவர் வயது மூப்பு காரணமாகக் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் தனித்துவமான நடிப்பால் அங்கீகாரம் பெற்றவர் மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.. இவர் கடந்த 2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். வில்லனாக அவரது நடிப்பு தனித்துவமாக இருந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க ஒரே படத்தில் கவனிக்க வைத்தார்.

Cinema Hyderabad

தொடர்ந்து, 'குத்து', 'திருப்பாச்சி', 'கோ எனப் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற கோட்டா சீனிவாச ராவ், அரசியல்வாதியும் கூட.. 1999 - 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார்.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் வயது மூப்பு காரணமாகச் சிரமப்பட்டு வந்தார். 2023ம் ஆண்டுடன் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.. சினிமாவில் இருந்து விலகியிருந்த கோட்டா சீனிவாச ராவ் நடிக்கவே சிரமப்பட்டதாகவும் தொடர் மருத்துவச் சிகிச்சையும் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக சினிமாவில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு உதவியும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்ந்த நிலையில், அவரது போட்டோக்கள் கூட வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே அவர் வயது மூப்பு காரணமாகக் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+