பாஜக கோபம் நம்ம பக்கம் திரும்பிவிடக் கூடாது.. காங்கிரஸ் உடன் இடைவெளியோடு பயணிக்கும் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக மீது பாஜகவின் பார்வை அதிகமாக திரும்பிவிடக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் கவனமாக காய் நகர்த்தி வருவதாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்தாலும் பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்து ஒரு வார்த்தை கூட இதுவரை விஜய் பேசாததற்கும், தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித்ஷா முன் விஜய் பல்டி அடித்ததற்கும் இதுவே காரணமாக சொல்லப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பை மையமாக வைத்து தவெக பிரச்சாரம் மேற்கொண்டது. அது களத்தில் எடுபட்டதால், தவெக 108 தொகுதிகளில் வென்றது. இதன்பின் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் அதிகாரத்திற்கு வந்தார். தொடர்ந்து ராஜ்ய சபா சீட்டையும் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தவெக ஒதுக்கியது.

Vijay

தவெகவின் ஒவ்வொரு மேடையிலும் திமுகவை விமர்சிக்கும் விஜய், ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பாஜக தொடர்பாக இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் கூட, பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாகவே சட்டசபையில் பாஜக, மோடி, அமித்ஷா ஆகிய வார்த்தைகளை அமைச்சர் வன்னி அரசு கூறிய போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூலமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதேபோல் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றிய போது கூட, அமித்ஷா முன்னிலையில் விஜய் பல்டி அடித்தார்.

இன்னொரு பக்கம் மாநில உரிமைகளைப் பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதாவிற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக முதல்வர் விஜய் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாக பேரவையில் அமைச்சர் பிரபு கூறுகிறார். ஆனால் இந்த கடிதத்தை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. அதேபோல் அமித்ஷா வந்த போது, அவரை நேரில் சென்று வரவேற்க முதல்வர் விஜய் வந்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தனது வீட்டில் செய்யப்பட்ட மசாலா பொடி ஜாமான்களை அமித்ஷாவுக்கு அன்பளிப்பாக விஜய் கொடுத்திருக்கிறார். சட்டசபை மானியக் கோரிக்கையின் போது கூட மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி குறித்து எந்த அமைச்சரும் வாய் திறக்கவில்லை. இதன் மூலமாக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தாலும், அவர்களுடன் பெரியளவில் விஜய் நெருக்கம் காட்ட விரும்பவில்லை என்றே தெரிகிறது.

இதனாலேயே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்கப்பட்ட போதும் கூட, தவெக தரப்பில் இதுவரை ஒருவர் கூட அதனை ஆமோதித்து பேசவில்லை. மாறாக விஜய் தான் அடுத்த பிரதமர் என்று தவெகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் எந்தவொரு சூழலிலும் பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் தவெக தலைமையும், விஜய்யும் கவனமாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+