விஜயகாந்தைவிட செல்வாக்கு அதிகம்.. விஜய்க்கு 15% வாக்கு வங்கி இருக்கு.. சொல்கிறார் பத்திரிகையாளர் மணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு 15 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாக பத்திரிகையாளர் மணி கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜயகாந்தை விடவும் விஜய்-க்கு மிகப்பெரிய செல்வாக்கு மக்கள் மத்தியில் உள்ளதாக கூறிய அவர், அதிமுகவுடன் கூட்டணிக்கான அனைத்து கதவுகளையும் விஜய் மூடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கையில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்ததாக மாநாடு மற்றும் விஜய் சுற்றுப்பயணப் பணிகள் நடந்து வருகிறது. தவெக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் விஜய் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Vijay Commands 15 Vote Share Stronger Influence Than Vijayakanth Journalist Mani

பத்திரிகையாளர் மணி பேட்டி

இதன் மூலமாக அதிமுக - தவெக கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு தரப்பு, கடைசி நேரத்தில் அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்று கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி பேசுகையில், தவெக இனி அதிமுகவுடன் போக முடியாது என்று நினைக்கிறேன். அதற்கான அத்தனை சாதக அம்சங்களையும் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

அதிமுகவுடன் கூட்டணி?

பாஜக மற்றும் திமுகவுடன் விஜய் போக முடியாது. ஆனால் அரசியலில் ஒரு 10 சதவிகிதம் கதவு எப்போதும் திறக்கப்பட்டே இருக்கும். அதனால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அதிமுக - தவெக கூட்டணி அமையும். ஒருவேளை விஜயை முதல்வர் வேட்பாளராக அதிமுக ஏற்றுக் கொண்டால், கூட்டணி அமையும். ஆனால் எப்படி விஜயை அதிமுகவினர் ஏற்றுக் கொள்வார்கள்.

15% வாக்கு வங்கி

விஜய் முதல்வர் வேட்பாளர் என்றால், அவர் தனித்து போட்டியிட வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்த 18 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. விஜய் தனித்து போட்டியிட்டால் 15 சதவிகிதம் வரை வாக்கு பெறுவார். மிகப்பெரிய அளவில் விஜய் வாக்குகளை பிரிக்க போகிறார். அது யாருக்கு பாதகமாக முடியும் என்பதை தான் கூர்ந்து பார்க்க வேண்டும். விஜய்க்கு பயணம் செல்வதற்கு உரிமை உள்ளது.

விஜயகாந்தை மிஞ்சிய செல்வாக்கு

ஆனால் இதுவரை விஜய் மக்களை சந்திக்கவே இல்லை. அதேபோல் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பாஜக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் காசு கொடுத்துதான் மக்கள் அழைத்து வரப்படுகின்றனர். ஆனால் விஜய்-க்கு தன்னெழுச்சியாக கூட்டம் வரும். அதற்கு சினிமா புகழும் ஒரு காரணமாக இருக்கலாம். விஜயகாந்தை மிஞ்சிய செல்வாக்கு விஜய்க்கு இருக்கிறது.

இளைஞர்கள், பெண்கள் ஆதரவு

அந்த செல்வாக்கை விஜய் எப்படி பயன்படுத்துகிறார் என்பதே கேள்வி. விஜய்-க்கு இருக்கும் ஆதரவை சரியாக வழிநடத்தி பூத்திற்கு கொண்டு வர வேண்டும். எப்போது யார் முதுகில் குத்துவார்கள் என்பது தெரியாது. விஜயின் சுற்றுப்பயணத்தை அதிகளவிலான இளைஞர்கள் இருக்கிறார்கள். அதனை களத்தில் காண முடிகிறது. பெண்களும் விஜய்-க்கு ஆதரவளிப்பேன் என்று கூற தொடங்கி இருக்கிறார்கள்.

திமுக கூட்டணி

தமிழ்நாட்டை திமுக, அதிமுகவுக்கு பட்டா போட்டு கொடுக்கவில்லை. எப்போதும் தமிழ்நாட்டு மக்கள் புதியவர்களை விரும்புவார்கள். அதனால் கூட்டணி ஆட்சி என்பது கட்டாயமாகும். திமுக கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீட்டில் பிரச்சனை வரும். புதிய கட்சிகள் இடம்பெறும் என்று ஸ்டாலின் கூறிவிட்டார். மக்களுக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், திமுகவை ஆதரித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+