ரூ 8000 கூப்பனால் திருச்சி பெண் தற்கொலை! தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? விஜய் கண்டனம்
சென்னை: திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை (டம்மி) தராததை கேட்ட திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த பெண்ணை அவதூறாக பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது என தவெக தலைவரும், நடிகருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது

மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?
உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா?
மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு விஜய் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணச்சநல்லூரை அடுத்த வாழக்கட்டை பகுதியில் திமுகவினர் ரூ 8000 கூப்பன் மாதிரியை வீடு தோறும் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. எல்லா வீட்டிற்கும் கொடுக்க நிலையில் தனது வீட்டிற்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை என திமுக நிர்வாகிகளிடம் சிந்துஜா என்ற பெண் கேள்வி எழுப்பினாராம்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பெண்ணை எல்லார் முன்பும் ஆபாசமாக பேசியதால் மனவேதனை அடைந்த அந்த பெண் வீட்டிற்குள் போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி திருச்சி- லால்குடி சாலையில் சிந்துஜாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இறந்த சிந்துஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சிந்துஜாவின் இறப்பால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ரூ 8000 கூப்பன் மாதிரியை திமுகவினர் வீடுகள்தோறும் வழங்கி வருவதாகவும் திமுக வென்றால் அடுத்த நாளே இந்த கூப்பனை வைத்து வீட்டுத் தேவையான பொருளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.
-
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications