ரூ.500 கோடி சம்பளத்தை விஜய் விட்டுட்டு வந்தது எடப்பாடியை சிஎம் ஆக்கவா? திமுகவுக்கு வெற்றி கன்பார்ம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற நோக்கம் அதிமுக, பாஜகவுக்கு இல்லை.. அதேசமயம் விஜய் மீது குற்றம் சொல்லியும் அதிமுக, பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை. அதிமுக, பாஜகவின் ஒரே குறிக்கோள் திமுக மட்டுமே. கரூர் சம்பவத்தை வைத்து, எப்படியாவது திமுகவின் ஓட்டுக்களுக்கு சேதாரத்தை உண்டுபண்ண முடியுமா என்று பார்க்கிறது என்று பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, "கரூருக்கு வந்து சேர்வதற்கு மாலை 6 மணிக்கு மேலாகிவிடும் என்று அங்கு காத்து கொண்டிருக்கும் மக்களிடம் அறிவித்துவிடுங்கள்" என்று விஜய் தன்னுடைய நிர்வாகிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.

Edappadi Palanisamy Vijay DMK

அதேபோல கரூரில் என்ன நடந்தாலும் சரி, பாதிக்கப்பட்ட மக்களுடனேயே விஜய் நின்றிருக்க வேண்டும். ஆனால் சிக்கல் என்னவென்றால், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி போல விஜய்யும் அன்றைய தினமே கரூர் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருந்தால், விஜய்யை பார்ப்பதற்கு மீண்டும் அங்கே கூட்டம் கூடியிருக்கும்.

விஜய் செய்த தவறுகள்

அதுமட்டுமல்ல, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பேயே தம்மை நோக்கி செருப்பு வீசப்பட்ட நிலையில், தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்தால், ஏதோ ஒரு சமூக விரோத கும்பலால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், கரூரிலிருந்து உடனே விஜய் கிளம்பிவிட்டார்.

அதேபோல இதுவரை விஜய் ஊடகங்களை சந்திக்காமல் இருக்கிறார்.. இது அவருடைய விருப்பம்.. ஆனால், கரூரில் சம்பவம் நடந்ததுமே, திருச்சி ஏர்போர்டில் செய்தியாளர்கள் கேட்டபோது அவர்களிடம், "இப்போதுதான் விஷயம் தெரியும்.. நாளை காலை விரிவாக பேசுகிறேன்" என்று ஒற்றை வார்த்தை சொல்லியிருந்தால், அது ஏற்புடைய விஷயம். ஆனால், அங்கேயும் எதுவுமே சொல்லாமல் விஜய் சென்றுவிட்டார்.

நிர்வாகிகள் செய்த தப்பு

மறுநாளாவது, கரூர் சம்பவம் குறித்து விஜய் கருத்து கூறியிருக்க வேண்டும். ஆனால், 2 நாள் கழித்துதான் வீடியோ பேசுகிறார்.. அந்த வீடியோவில்கூட பெரிய அளவுக்கு கிளாரிட்டி இல்லை. இது அனைத்துமே விஜய் செய்த தவறுகள்,.

அதேபோல தவெக நிர்வாகிகளிடமும் சர்ச்சைகள் வெடித்தன.. விஜய் போலவே, புஸ்ஸிஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோரால் கரூருக்கு செல்ல முடியவில்லை. என்றாலும், விஜய்யை தவிர்த்துவிட்டு, மற்ற நிர்வாகிகள் கரூருக்கு சென்றிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, எங்கேயோ காணாமல் ஓடிவிட்டதை ஏற்க முடியவில்லை.

ஒரு துயர சம்பவம் நடந்துள்ள நிலையில், தங்கள் மீது தவறில்லை என்றாலும்கூட, தார்மீக பொறுப்பேற்று, நிர்வாகிகள் சரணடைந்திருக்க வேண்டும். அது மக்களிடம் நன்மதிப்பை மேலும் பெற்றுத் தந்திருக்கும்.. ஆனால், நிர்வாகிகள் தலைமறைவானதை சகிக்கவே முடியவில்லை..

அரசியல் வாழ்க்கை என்றால், கைது, சிறைவாசம் போன்றவை தவிர்க்க முடியாதவை, இது இல்லாமல் அரசியல் செய்யவும் முடியாது. இதைகூட தவிர்ப்பது, தவெகவுக்கு கெட்ட பெயரை தந்துவிட்டது.

எடப்பாடி விஜய் கூட்டணி

விஜய் வந்தால் தனக்கான வெற்றி நிச்சயம் என்று எடப்பாடியும் உறுதியாக நம்புகிறார். எனவே எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தவியாய் தவித்து வருகிறார்..

ஆனால் விஜய்யை பொறுத்தவரைக்கும் இந்த முறை தனித்து தேர்தலில் போட்டியிடுவதுதான்.. காரணம், அதிமுகவுடன் பாஜக இருப்பதால், கண்டிப்பாக அந்த கூட்டணிக்கு விஜய் போக மாட்டார். இதுதான் உண்மை..

விஜய்யை சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற நோக்கம் அதிமுக, பாஜகவுக்கு இல்லை.. அதேசமயம் விஜய் மீது குற்றம் சொல்லியும் அதிமுக, பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை.

திமுக மட்டுமே குறி

ஆனாலும் கரூர் சம்பவத்தில் விஜய் மீது தவறில்லை என்று பாஜக, அதிமுக தொடர்ந்து சொல்ல காரணம், திமுக மீது பழியை போட்டு, திமுகவுக்கு நெருக்கடி தந்து, அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற இதை பயன்படுத்தி கொள்ளலாம், திமுக வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தலாம் என்ற நோக்கம்தானே தவிர, விஜய்க்கு சப்போர்ட் செய்வதற்காக கிடையாது.

ரூ.500 கோடி வருமானம்

500 கோடி ரூபாய் வருமானத்தை தூக்கி போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கவா? அதேபோல விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கவா எடப்பாடி கட்சி நடத்திட்டு இருக்காரு? எனவே இதுவே முரணானது என்பதால் அதிமுக, தவெக கூட்டணி என்பது இந்த தேர்தலில் சாத்தியமில்லை.

தனித்து நின்று போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரிந்து திமுகவுக்குதான் சாதகமாகும் என்று அனைவருக்குமே தெரியும்.. அதற்காக பாஜகவுடன் கூட்டணி என்று விஜய் போக மாட்டார்.. அதுமட்டுமல்ல, 2026-ல் எதிர்பார்த்த வெற்றி தவெகவுக்கு கிடைக்காது, 2031-ல்தான் தவெகவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதும் விஜய்க்கு நன்றாகவே தெரியும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+