கல்லா கட்டும் மா.செ.க்கள்.. வசூலில் பிஸியான மந்திரிகள்! CM டேபிளில் மெகா லிஸ்ட்! களையெடுப்பு உறுதி?
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்று, 6 மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் தலைமைச் செயலக வட்டாரங்களில் ஒரு முக்கிய தகவல் பேசப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும், முக்கிய புள்ளிகளின் டீலிங் பட்டியல் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கிறதாம். இதை அடுத்து விரைவில் கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றங்கள் இருக்கும் என்கின்றனர். அமைச்சரவையில் சிலர் கழற்றிவிடப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனவும், முக்கிய அமைச்சர்களின் துறைகள் பறிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலையில் இருந்து, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்படலாம் எனவும் சொல்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த விஜய், விழுப்புரம் மாநாட்டின் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தமிழக வெற்றி கழகம்.

திமுக - அதிமுக மிகப் பெரும் கூட்டணி பலத்துடன் களமிறங்கிய நிலையில் அந்த கட்சிகள் இரண்டாவது மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்பட்டன. கூட்டணியே இல்லாமல் தேர்தலில் களமிறங்கிய தமிழக வெற்றி கழகம் தனி பெருங்கட்சியாக உருவானது.
ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய். காங்கிரசுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும் நிலையில் கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மே மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் நடந்த நிலையில் 6 மாதங்கள் கடந்து இருக்கிறது. இதற்கிடையே 6 மாத ஆட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் கவுன்சிலர் சீட்டு தருவதாகவும், கட்சியில் பொறுப்பு தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்த தகவல் தலைமைக்கு சென்று இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் அரசு நிர்வாகத்திலும் மாவட்ட செயலாளர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அமைச்சர்களின் செயல்பாடுகளும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டதாம். ஆறு மாத ஆட்சிக்காலத்தில் கட்சி தலைமை உத்தரவை மீறி முறைகேடு புகார்கள் உள்ளிட்டவற்றில் சிக்கி அவர்களின் பட்டியில் தயார் செய்யப்பட்டு இருக்கிறதாம்.
இதை அடுத்து கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்கின்றனர். அமைச்சரவையில் சிலர் கழற்றிவிடப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனவும், முக்கிய அமைச்சர்களின் துறைகள் பறிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலையில் இருந்து ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்படலாம் எனவும் சொல்கின்றனர்.
மேலும் சில மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பட்டியல் அனைத்தும் தற்போது உளவுத்துறை மூலம் தயார் செய்யப்பட்டு முதல்வரின் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி மாற்றம் இருக்கும் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.




Click it and Unblock the Notifications
