“தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது” - ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் தரப்பு வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வழக்குகள் முடியும் வரை தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது என 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Vijay Government

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில், முதல்வர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17 ஆம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே10 ஆம் தேதியே தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும்; ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலை தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

இதே போல் தடையை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில், தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. தேர்தல் வழக்கு முடியும் வரை தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது என முதலமைச்சர் விஜய் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

தேர்தல் வழக்கு முடியும் வரை 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், இந்த மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் தரப்பு வாதம் இன்று நிறைவடையாததால் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+