திரிஷாவுடன் சுற்றலாமா? கீர்த்தி சுரேஷுடன் சுற்றலாமா? விஜயை கடுமையாக தாக்கிய திமுக எம்எல்ஏ.. மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாத விஜய் மக்களை எப்படி பார்த்து கொள்வார், ஜெயலலிதா போல் முதல்வர் ஸ்டாலின் இருந்தால் அங்கிள் என்றதற்கு துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று திருவொற்றியூரில் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ சங்கர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

வட சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியில் சுமார் 60 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியானது அந்த தெருவில் மேடை அமைத்து நடத்தப்பட்டது. இதில் திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கே பி சங்கர் கலந்து கொண்டார்

TVK Manadu Vijay Madurai TVK

திரிஷாவோடு சுற்றலாமா விஜய்

மேடை ஏறி பேசிய எம்எல்ஏ சங்கர் . நடிகர் விஜய் அரசியலுக்கு தற்போது தான் வந்திருக்கிறார் திரிஷாவோடு சுற்றலாமா கீர்த்தி சுரேஷ்வோடு சுத்தலாமா என நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு திமுக கட்சியை பற்றி என்ன தெரியும். பெற்ற தகப்பன் வளர்த்த தாய் கட்டிய மனைவி பார்த்துக் கொள்ள முடியாத விஜய் தன்னை நம்பி வரும் மக்களை எப்படி காப்பார்

அவரை நம்பி சென்றால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். அங்கிள் என்று கூறிய விஜய் தனது தந்தையுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் கைகட்டி நின்று கொண்டிருந்ததை மறந்து விட்டார்

விஜய் அங்கிள் ஸ்டாலின்

ஜெயலலிதா போல் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் இருந்திருந்தால் விஜயின் துணியை உருவி ஓட விட்டிருப்பார். ஆனால் எதையும் மறக்கும் குணம் கொண்டவர் முதல்வர் என்பதால் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என விஜய் அங்கிள் என்று பேசியதற்கு தனது ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்.

அங்கிள் விமர்சனம் விஜய்

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தங்கள் கட்சியின் ஒரே கொள்கை ரீதியான எதிரி பாஜகதான் என்றும், அரசியல் ரீதியான எதிரி திமுகதான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், டீலிங் போட்டு கூட்டணி அமைக்கும் கட்சி தாங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் கட்சி உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜகவுடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை என விஜய் சுட்டிக் காட்டினார். தவெக முன்னெடுக்கும் அரசியல் உண்மை, உணர்வுபூர்வம், மற்றும் நல்ல அரசியல் மட்டுமே என்றும், நல்லது மட்டுமே செய்யும் அரசியல் என்றும் அவர் கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்றும், வேறு போட்டி இருக்காது என்றும் விஜய் சவால் விட்டார். திமுக கூட்டணி அமைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார். எம்ஜிஆர் இருக்கும் வரை யாராலும் முதல்வராக ஆக முடியவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகவும், ஒரு ரெய்டு வந்ததும் உடனடியாக டெல்லிக்குச் சென்று ரகசியச் சந்திப்புகளை நடத்துவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங் அங்கிள்" என விமர்சித்தார். "மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+