விஜய் சுனாமினு சொல்லலாம் போல.. 2 ஆண்டில் இரு திராவிட கட்சிகளையும் அதிரவிட்ட விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் 104 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது இரு திராவிட கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரு கட்சிகளை விடவும் விஜய் கட்சி அதிக தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தவெக 103 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், திமுக கூட்டணி 55 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. விஜய்யின் தவெக தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை இடங்களை பெற்றிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay

இதற்கு முன்பாக எம்ஜிஆர் கூட கட்சி தொடங்கி இடைத்தேர்தலில் வென்று கூட்டணி அமைத்துதான் 1977ல் ஆட்சியை பிடித்தார். அதேபோல் திமுக தொடங்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் போராடி தான் ஆட்சியை பிடித்தது. தேமுதிக தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலமாக தவெக சாதிய கணக்குகளையும் தமிழ்நாட்டில் முறியடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தவெக எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகமாக கைப்பற்றும் என்ற விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் தவெக பெரும்பாலும் திமுகவின் வாக்குகளை கைப்பற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது. 31 அமைச்சர்களில் முதல்வர் ஸ்டாலின் உட்பட 23 பேர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது திமுக தலைமையையும் கூட அதிர வைத்துள்ளது.

சென்னை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தவெக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் மாவட்டங்களில் அதிமுகவை காலி செய்துள்ள தவெக, திமுகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இந்த தேர்தலை விஜய் சுனாமி ஆக்கிரமித்துவிட்டதாக அவரது தொண்டர்கள் பேசி வருகின்றனர்.

பெரும்பாலான தொகுதிகளில் 4 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்ட நிலையில், தவெக வேட்பாளர்கள் தொடர்ச்சியாகவே முன்னிலையில் உள்ளனர். சுமார் 41 தொகுதிகளில் திமுக 1,500க்கும் குறைவான வாக்குகளில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இன்னும் அரை மணி நேரம் வரை, இதே டிரெண்ட் சென்றால், தவெக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+