பாஜகவை துல்லியமாக கணித்த ஃபலோடி சத்தா பஜார்.. திமுக 140-143, அதிமுக 45-65, தவெக 7-9
சென்னை: இந்தியாவின் தேர்தல் முடிவுகளைக் கணிப்பதில் மிகவும் துல்லியமானதாகக் கருதப்படும் ஃபலோடி சத்தா பஜார் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மற்ற எக்சிட் போல்களை விட இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் ஊடகங்களால் தரப்படுகிறது. இந்த கணிப்பில் திமுக 140முதல் 143 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 45 முதல் 65 இடங்களிலும், விஜய்யின் தவெக 7 முதல் 9 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை திமுக கூட்டணி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் உற்சாகமாக உள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காகத் தமிழகமே காத்திருக்கும் வேளையில், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க 'ஃபலோடி சத்தா பஜார்' தனது கணிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் இவர்களின் கணிப்பு பெரும்பாலும் நிஜமாகி வருவதால், இந்தக் கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபலோடி சத்தா பஜாரின் கணிப்புப்படி, தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட அதிகமாக, அதாவது 140 முதல் 143 இடங்கள் வரை திமுக கூட்டணி கைப்பற்றும் என்று இந்தக் கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் அரியணை ஏறுவது கிட்டத்தட்ட உறுதி எனத் தெரிகிறது.
சறுக்கும் அதிமுக
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இந்தக் கணிப்பில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. வெறும் 45 முதல் 65 இடங்கள் வரை மட்டுமே அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறையை விட இது குறைவு என்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.
விஜய்யின் தாக்கம்
முதன்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக 7 முதல் 9 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஃபலோடி சத்தா பஜார் கூறுகிறது. ஒரு புதிய கட்சிக்கு இது ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கப்பட்டாலும், அவர்கள் எதிர்பார்த்த "பெரிய மாற்றம்" தேர்தல் முடிவுகளில் எந்த அளவிற்கு எதிரொலிக்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது
மொத்த இடங்கள்: 234
ஆட்சி அமைக்கத் தேவை: 118
திமுக+: 140 - 143
அதிமுக+: 45 - 65
தவெக: 07 - 09
மற்ற எக்சிட் போல் கணிப்புளை போலவே, ஃபலோடி சத்தா பஜாரும் திமுகவுக்குக் கூடுதல் பலத்தையும், விஜய்க்கு மிகக் குறைவான இடங்களையுமே ஒதுக்கியுள்ளது. எனினும், நிஜமான "கிங்" யார் என்பது வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.
-
அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. தூண் ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலவீனமா? முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!










Click it and Unblock the Notifications