இதுதான் வாக்குறுதி.. முதல் கட்டமாக முக்கிய திட்டங்களை அடுக்கிய விஜய்.. தவெகவின் ஆக்‌ஷன் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாநாட்டைத் தொடர்ந்து, இன்று வேலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி கூட்டத்தை நடத்தினார். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்று 4900 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று வேலூர் பொதுக்கூட்டத்தில் 'ஆக்‌ஷன் பிளான்களை' அடுக்கிய விதம் அரசியல் வட்டாரத்தில் செம ஹாட் டாபிக். கட்சியின் முக்கியமான சில வாக்குறுதிகளை இன்று மக்கள் முன் அவர் அறிவித்தார்.

தவெக வாக்குறுதிகள்: விஜய்யின் வேலூர் ஸ்பீச் ஹைலைட்ஸ்:

விஜய் பேசுகையில், "மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது. மக்களை அவரவர் ஊரில் வந்து பார்க்கவே விருப்பம். ஆனால் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை சந்திக்க முடியவில்லை. நமது ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து மக்களை சந்திக்கிறேன், என்றார்.

Vijay talks about the major promises of TVK in the today Meeting in Vellore

பெண்கள் பாதுகாப்பு: வெறும் வார்த்தை இல்லை, இது 'டாப் பிரையாரிட்டி'

பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய விஜய், அதுவே தங்கள் ஆட்சியின் முதல் இலக்கு என ஆணித்தரமாகச் சொன்னார்.

அடிப்படை வசதியில் அதிரடி: பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியம் காக்க "அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பான, உறுதியான கதவுகளுடன் கூடிய கழிப்பறை வசதி" செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

போதை இல்லாத தமிழகம்: இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை வேரோடு ஒழித்து, ஒரு "Drug-Free Society" உருவாக்குவதே எங்கள் லட்சியம் என குறிப்பிட்டு உள்ளார்.

கல்வி வாக்குறுதி : நோ நீட், நோ கோச்சிங் சென்டர்

நம்பர் 1 அரசுப் பள்ளிகள்: அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் தரம் உயர்ந்து, தனியார் கல்வி நிலையங்களை விட நம்பர் 1 தரத்தில் இருக்கும் என உறுதி அளித்தார்.

கோச்சிங் சென்டர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி: கல்வித் தரம் உயர்ந்தால் எதற்குத் தனியாகப் பயிற்சி மையங்கள்? "அனைவருக்கும் தரமான கல்வி" கிடைத்தால் கோச்சிங் சென்டர்களின் தேவையே இருக்காது என நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

அரசியல் கல்வி: மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை அரசியல் கல்வி கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் நாளைய தலைமுறையை விழிப்புணர்வுள்ள குடிமக்களாக மாற்றுவோம் என்றார்.

கிராமப்புறக் கனெக்டிவிட்டி & தொழிலாளர் நலன்

பட்டிதொட்டியெங்கும் பஸ்: "ரிமோட் ஏரியா" எனப்படும் கடைக்கோடி கிராமங்களுக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் கொண்டு வரப்படும். போக்குவரத்து வசதி என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்களின் உரிமை எனப் பேசினார்.

ஓட்டுநர்களுக்கு 'வெல்பேர் போர்டு': ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கெனத் தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

விவசாயிகள் & மீனவர்கள்: நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வரும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி தந்தார்.

வெளிப்படையான நிர்வாகம்

"சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டுமானால், சட்ட அமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் (Transparent) இருக்க வேண்டும்" எனத் தெரிவித்த அவர், எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நேர்மையான சட்டத் திட்டத்தை அமல்படுத்துவோம் என அறிவித்து உள்ளார். .

முக்கிய கோரிக்கை

தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று நடைபெற்றது. அந்தச் சந்திப்புக்குப் பின்னர் தவெக நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய். அதில், "எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. யாரை நம்பியும் ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+