ஆனா.. இது ரொம்ப புதுசா இருக்குணே! மேடை, சேர் இல்லாமல் தவெக பொதுக் கூட்டம்! புதுச்சேரியில் புது ரூட்!
புதுச்சேரி: கரூர் நெரிசல் விபத்துக்குப் பிறகு இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தமிழகம் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை மறுநாள் புதுச்சேரியில் பொதுமக்களை சந்திக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் மக்களை சந்தித்த நிலையில், முதன்முறையாக பொதுவெளியில் மக்களைச் சந்திக்கவுள்ளார் விஜய். அதுவும் பொதுக்கூட்டத்தின் வாயிலாக.. ஆனால், வழக்கமான பொதுக்கூட்டம் போல் இல்லாம் மேடையின்றி, சேர்கள் இன்றி பொதுகூட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரம் விஜயின் அரசியல் பயணத்துக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது. விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வெளியே வராத விஜய் சிபிஐ விசாரணைக்கு பிறகு தான் வெளியே வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள அரங்கில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா என தனது அரசியல் கட்சியை கொண்டு செல்ல திட்டமிட்ட விஜய் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்.

தவெக பொதுக்கூட்டம்
ஆனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காரணம் காட்டி அவரது சாலை வலத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்தது. தொடர்ந்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், புதுச்சேரி போலீஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வழக்கமாக அரசியல் பொதுக்கூட்டங்களில் காணப்படும் மேடை, தொண்டர்களுக்கான இருக்கைகள், பெரிய அமைப்புகள் எதுவும் இங்கு இருக்காது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விஜய் புதுச்சேரி வருகை
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு முதலில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், போலீஸார் அதற்கு அனுமதி அளிக்காததால் மாற்று ஏற்பாடாக துறைமுக வளாகத்தில் பெரிய திடல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்த நீரை வெளியேற்றி, மண் கொட்டி சமன் செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக, கூட்ட நுழைவு எளிதாக இருக்க துறைமுக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு புதிய வாயில் அமைக்கப்படவுள்ளது.
QR நுழைவு சீட்டு
இந்த கூட்டத்துக்கு வருபவர்களுக்கு க்யூஆர் கோடு நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் வரக் கூடாது, நெரிசல் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வரம்புக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே க்யூஆர் கோடு இணைக்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சீட்டுகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள தவெக கிளை கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு இல்லாதவர்கள் உள்ளே செல்ல முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் சந்திப்பு
இந்த பொதுக்கூட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் என்ன என்றால், இந்த கூட்டத்தில் மேடை கிடையாது. விஜய் மேடையில் நிற்காமல், தனது பிரச்சார வாகனத்தின் மீது நின்றபடி உரையாற்றவுள்ளார். தொண்டர்களுக்கான இருக்கைகளும் அமைக்கப்படவில்லை. எனவே மக்கள் அனைவரும் நின்றபடி விஜயின் உரையை கேட்க வேண்டியிருக்கும். மேலும், விஜயின் பயணத்திட்டமும் இப்படித்தான் இருக்க வேண்டுமென போலீசார் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசார் வழங்கியுள்ளனர்.
விஜய் உரை நேரம்
திங்கட்கிழமை இரவு விஜயின் பிரச்சார வாகனம் புதுவைக்கு வரும். செவ்வாய் காலை 11 மணியளவில் விஜய் துறைமுக வளாகத்தை அடைவார். பொதுக்கூட்டத்திற்கு 10.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய் சுமார் 12 மணியளவில் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் முதல் முறையாக மக்கள் முன் பேசப்போகிறார் என்பதால் புதுவை தவெக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில் நெரிசல் துயரத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் இதே பாணியில் கூட்டம் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்?












Click it and Unblock the Notifications