அடேங்கப்பா! விஜய் பயணிக்கும் தனி விமானத்தின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஆடிப்போயிடுவீங்க
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் தனது வெளியூர் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கோவைக்கும், மதுரைக்கும் சென்ற போதும் விஜய் தனி விமானத்தில்தான் பயணம் செய்தார். விஜய் பயணம் செய்த பிரைவெட் ஜெட்டின் விலை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வேலைகளில் விஜய் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை, மதுரையில் உற்சாக வரவேற்பு
தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வரும் விஜய், இதுதான் தனது கடைசி படம் எனவும் அதன் பிறகு முழு வீச்சாக அரசியலில் களம் காணப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் விஜய், தற்போது அரசியல் களத்த்தில் குதித்துள்ளதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள்.
அண்மையில் தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்ற விஜய், ரோடு ஷோவும் நடத்தினர். விஜய்யை காண கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இளைஞர்கள் திரண்டனர். விஜய் பிரசார வாகனத்தின் மீது ஏறியது, வாகனத்தை பின் தொடர்ந்து ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டியது என இளைஞர்கள் ஆர்வக்கோளாறில் ஆபத்தான செயல்களிலும் ஈடுபட்டனர்.
விஜய் வருகையால் கோவை விமான நிலையம் முன்பாக தவெக தொண்டர்கள் திரண்டனர். அதேபோல, ஜனநாயகன் படப்பிடிப்புக்காக விஜய், கொடைக்கானல் சென்றார். இதற்காக கடந்த வியாழக்கிழமை மதுரைக்கு வந்து அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். விஜய் வருகை தருவதை அறிந்த தவெக தொண்டர்கள் காலையில் இருந்தே மதுரை விமான நிலைய பகுதியில் குவிந்தனர்.
தனி பிரைவேட் ஜெட்
சினிமா சூட்டிங்கிற்காகவே செல்வதாக விஜய் கூறிய போதும் அவரை பார்க்க வழிநெடுக கட்சியினர் திரண்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இப்படி விஜய் செல்லும் இடங்கள் எல்லாம் அவரை பார்க்க கட்சியினர் திரண்டு வருவதை பார்க்க முடிகிறது. விஜய் தனது வெளியூர் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கோவைக்கு பல கமர்ஷியல் விமானங்கள் இருந்தாலும் விஜய் தனது பிரைவேட் ஜெட்டில் சென்றார்.
அதேபோல, மதுரைக்கும் தனி விமானத்திலேயே சென்றார். விஜய் பயணம் செய்யும் இந்த தனி விமானத்தின் விலை மட்டும் கிட்டதட்ட ரூ.8 கோடி என்று சொல்கிறார்கள். இந்த பிரைவேட் ஜெட்டில் அதி நவீன வசதிகளும் உள்ளதாம்.
ஜனநாயகன் திரைப்படம்
விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுவாகும். விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் சூட்டிங் முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளார். விஜய் படப்பிப்பு நடைபெற்று வருவதால் அவரைக் காண கொடைக்கானலுக்கும் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.
-
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications